/tamil-ie/media/media_files/uploads/2019/06/Primeday.jpg)
Amazon Prime Day 2019 Offers Discounts
Amazon Prime Day 2019 Offers Discounts : ஜூலை 15ம் தேதி முதல் ஆரம்பமாகிறது அமேசான் ப்ரைம் டே 2019 சலுகைகள். ஜூலை 15ம் தேதி துவங்கி ஜூலை 17ம் தேதி நள்ளிரவு வரை நிறைய சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.
இந்தியா மட்டுமல்லாமல், இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, அமீரகம், இத்தாலி, ஜெர்மனி, ஃப்ரான்ஸ், ஸ்பெய்ன், சீனா, நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் அமேசான் ப்ரைம் டே சலுகைகள் வாடிக்கையாளர்களுக்காக வழங்கப்படுகிறது.
அமேசான் நிறுவனத்தின் மிகப்பெரிய கோடைக்கால தள்ளுபடி இதுவாகும். ஆனால் இது முழுக்க முழுக்க ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கான விழாக்கால சலுகைகள் ஆகும். வாடிக்கையாளர்கள் ரூ. 129 கட்டி, அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்களாக மாறிக் கொள்ளலாம். அமேசான் ம்யூசிக், அமேசான் ப்ரைம் வீடியோ உள்ளிட்ட நிறைய சலுகைகளை ப்ரைமில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
இந்த இரண்டு நாள் தள்ளுபடி விலையில், நிறைய நிறைய ஸ்மார்ட்போன்கள், டேப்லட்கள், கம்ப்யூட்டர் அக்சசரிஸ்கள், அன்றாட தேவைகளுக்காக பயன்படும் பொருட்கள் அன அனைத்திற்கும் சலுகைகள், தள்ளுபடிகள், எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள் உள்ளன. Amazon Prime Video ப்ளாட்பார்மில் ஜூலை 1ம் தேதி முதல் ஜூலை 14ம் தேதி வரை புதிய படங்களையும் வெளியிடுகிறது அமேசான் நிறுவனம்.
மேலும் படிக்க : 80 நாட்களில் 10 லட்சம் போன்களை விற்றுத் தீர்த்த சாம்சங் நிறுவனம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.