ஆண்ராய்ட் 10 Q அப்டேட் பெறும் ஸ்மார்ட்போன்கள் பட்டியல் இதோ! உங்க போனும் இருக்குதான்னு செக் பண்ணிக்கங்க…

தற்போது வெளியாக இருக்கும் பிக்சல் 4 ஸ்மார்ட்போனும் இதே இயங்கு தளத்தில் இயங்க உள்ளது.

Android 10 Q update, Samsung, OnePlus, Google Pixel, Xiaomi
Android 10 Q update

Android 10 Q update : ஆண்ட்ராய்ட் 9 பையைத் தொடர்ந்து ஆண்ட்ராய்ட் 10 க்யூ மொபைல் ஆப்ரேட்டிங் சிஸ்டம் வெளியிடுவது குறித்து கூகுள் ஆலோசனை செய்து வருகிறது. அதற்கான திட்டப்பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் இந்த புதிய அப்டேட் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் எப்போது வெளியாகும் என்பது தொடர்பான முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.

Smartphones Getting Android 10 Q update

சியோமி, ஒன்ப்ளஸ் போன்ற நிறுவனங்கள், தங்களின் போன்கள் புதிய அப்டேட்களை பெறுகிறதா என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். இருப்பினும் எப்போது அப்டேட் ஆகும் என்பது குறித்த பதில்கள் அந்நிறுவனங்களிடமும் இல்லை.

மேலும் படிக்க : இனிமேல் நீங்கள் வாட்ஸ்ஆப் மூலமாகவும் பணம் அனுப்பிக் கொள்ளலாம்… அப்டேட் ரெடி! அனுமதிக்காக வெய்டிங்…

Google Pixel smartphones

ஆண்ட்ராய்டின் எந்த அப்டேட்டும் முதலில் ஏற்றுக் கொள்ளும் டிவைஸ் தான் பிக்சல் போன்கள். தற்போது வெளியாக இருக்கும் பிக்சல் 4 ஸ்மார்ட்போனும் இதே இயங்கு தளத்தில் இயங்க உள்ளது. கீழே இருக்கும் அனைத்து போன்களும் புதிய அப்டேட்களை பெறுகிறது.

கூகுள் பிக்சல் (Google Pixel)
கூகுள் பிக்சல் எக்ஸ். எல் (Google Pixel XL)
கூகுள் பிக்சல் 2 (Google Pixel 2)
கூகுள் பிக்சல் 2 எக்ஸ்.எல் (Google Pixel 2 XL)
கூகுள் பிக்சல் 3 (Google Pixel 3)
கூகுள் பிக்சல் 3 எக்ஸ்.எல் (Google Pixel 3 XL)
கூகுள் பிக்சல் 3ஏ (Google Pixel3a)
கூகுள் பிக்சல் 3ஏ எக்ஸ்.எல் (Google Pixel 3a XL)

Xiaomi smartphones

சியோமி நிறுவனத்தின் 11 ஸ்மார்ட்போன்கள் இந்த அப்டேட்களை பெறுகின்றன.

சியோமி எம்.ஐ. 9 (Xiaomi Mi 9)
ரெட்மி கே20 ப்ரோ (Redmi K20 Pro)
சியோமி எம்.ஐ. 8 (Xiaomi Mi 8)
சியோமி எம்.ஐ. 8 எக்ஸ்ப்ளோரர் (Xiaomi Mi 8 Explorer)
சியோமி எம்.ஐ. 8 ஸ்க்ரீன் ஃபிங்கர் பிரிண்ட் எடிசன் (Xiaomi Mi 8 Screen fingerprint edition)
சியோமி எம்.ஐ. மிக்ஸ் 2 எஸ் (Xiaomi Mi MIX 2S)
சியோமி எம்.ஐ. மிக்ஸ் 3 (Xiaomi Mi MIX 3)
ரெட்மி கே20 (Redmi K20)
ரெட்மி நோட் 7 ப்ரோ (Redmi Note 7 Pro)
ரெட்மி நோட் 7 (Redmi Note 7)
போக்கோபோன் F1 (Poco F1)
Xiaomi Mi 9SE

OnePlus smartphones

ஒன்ப்ளஸ் போன்களில் கடந்த ஒரு வருடத்திற்குள் வெளியான நான்கு போன்களுக்கு மட்டும் புதிய அப்டேட்டினை வழங்கியுள்ளது.

ஒன்ப்ளஸ் 6 (OnePlus 6)
ஒன்ப்ளஸ் 6டி (OnePlus 6T)
ஒன்ப்ளஸ் 7 (OnePlus 7)
ஒன்ப்ளஸ் 7 ப்ரோ (OnePlus 7 Pro)

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Android 10 q update which phones from samsung oneplus google pixel xiaomi are getting new updates

Next Story
வாட்ஸ்ஆப் மூலமாகவும் இனிமேல் பணம் அனுப்பிக் கொள்ளலாம்… அப்டேட் ரெடி! அனுமதிக்காக வெய்டிங்…WhatsApp New Updates 2019 WhatsApp Pay
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com