வாட்ஸ்ஆப் மூலமாகவும் இனிமேல் பணம் அனுப்பிக் கொள்ளலாம்... அப்டேட் ரெடி! அனுமதிக்காக வெய்டிங்...

WhatsApp Dark Mode : பேக்ரௌண்ட் முழுக்க முழுக்க க்ரே நிறத்தில் காட்சியளிக்கும். ஐகான்கள் மற்றும் ஹெட்டிங்குகள் வாட்ஸ்ஆப்பின் பச்சை நிறத்தில் ஹைலைட் செய்யப்படும்.

WhatsApp New Updates 2019 WhatsApp Pay : 1.5 பில்லியன் பயனாளர்கள் உபயோகிக்கும் வாட்ஸ்ஆப்பின் புதிய அப்டேட்கள் என்னென்ன ? ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் போன்களுக்கு என பிரத்யேகமாக கொண்டுவரப்பட்டிருக்கும் முக்கியமான அப்டேட்களை நாம் இங்கே காணலாம்.

டார்க் மோட் (Dark Mode)

ஏற்கனவே யூட்யூப், ட்விட்டர், மற்றும் மெசெஞ்சர் என அனேக இடங்களில் பயன்பாட்டில் இருக்கும் இந்த ஒரு சிறப்பம்சம் வாட்ஸ்ஆப்பில் கொண்டுவரப்பட வேண்டும் என்பதில் மிகவும் தீவிரம்காட்டி வந்தது வாட்ஸ்ஆப். ஒருவருடங்களுக்கு மேலாக கிடப்பில் இருந்த அப்டேட் தற்போது பீட்டா வாடிக்கையாளர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டதுள்ளது.

டார்க் மோடில் பேக்ரௌண்ட் முழுக்க முழுக்க க்ரே நிறத்தில் காட்சியளிக்கும். அதே போன்று ஐகான்கள் மற்றும் ஹெட்டிங்குகள் வாட்ஸ்ஆப்பின் பச்சை நிறத்தில் ஹைலைட் செய்யப்படும்.

ஆன்லைன் ஸ்டேட்டஸ் (Hide online status)

லாஸ்ட் சீனை மட்டுமே மாற்றும் ஆப்சன்கள் முன்பு இருந்தது. ஆனால் தற்போது வர இருக்கும் புதிய அப்டேட்டில் ஆன்லைன் ஸ்டேட்டஸ் என்பதே காட்டாது. முழுக்க முழுக்க வாடிக்கையார்களின் ப்ரைவசியை மையப்படுத்தி இது உருவாக்கப்பட்டுள்ளது.

ஃபுல் சைஸ் இமேஜஸ் (Full size images)

போட்டோக்கள், வீடியோக்கள், ஆல்பம்கள், மற்றும் கான்டாக்ட் விபரங்கள் என அனைத்தையும் எளிதாக அனுப்பும் வசதியினை இந்த ஆப் பெற்றுள்ளது. இருப்பினும் நாம் அனுப்பும் புகைப்படங்களில் பிக்சல்கள் குறைக்கப்பட்டே இது நாள் வரையில் புகைப்படங்கள் அனுப்பப்பட்டு வந்தன. ஆனால் இந்த அப்டேட்டிற்கு பிறகு பிக்சல்கள் சேதாரம் இல்லாமல் நீங்கள் இனி வாட்ஸ்ஆப்பில் புகைப்படங்கள் அனுப்பிக் கொள்ளலாம்.

WhatsApp New Updates 2019 WhatsApp Pay

கடந்த ஆண்டில் இருந்து திட்டம் மற்றும் கட்டமைப்புகளில் ஈடுபட்டு வரும் மற்றொருமொரு அப்டேட் தான் இந்த வாட்ஸ்ஆப் பே. பீட்டா ஸ்மார்ட்போன்களில் இயங்கி வரும் இந்த அப்டேட், அதிகாரப்பூர்வ அனுமதிக்காக காத்துக் கொண்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இதனை பயன்படுத்த தங்களின் யூ.பி.ஐ அக்கௌண்ட்டினை வாட்ஸ்ஆப்புடன் இணைக்க வேண்டும். இந்தியா மட்டுமல்லாமல் உலகமெங்கும் இந்த அப்டேட்டினை வழங்க காத்துக் கொண்டிருக்கிறது வாட்ஸ்ஆப்.

மேலும் படிக்க : 5000 mAh பேட்டரியுடன் வெளியாகிய விவோ Y12… பட்ஜெட் வாடிக்கையாளர்களை ஈர்க்குமா ?

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close