Advertisment

பட்ஜெட் வாடிக்கையாளர்களுக்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் விவோ Y12... விலை என்ன தெரியுமா?

Vivo Y12 Camera Spec : டைம் லாப்ஸ், லைவ் போட்டோக்கள், எச்.டி.ஆர், போர்ட்ரைட் மோட், பனோரமா, போர்ட்ரைட் பூக் சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இதன் கேமராக்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Budget Phone: Vivo Y12 Smartphone Features, Price, Specifications, Sales

Budget Phone: Vivo Y12 Smartphone Features, Price, Specifications, Sales

Budget Phone: Vivo Y12 Smartphone Features, Price, Specifications, Sales : விவோ நிறுவனம் இந்தியாவில் ஒய்12 (Vivo Y12) என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ஆர்ட்டிஃபிசியல் இண்டெலிஜென்ஸூடன் கூடிய மூன்று கேமராக்கள் மற்றும் 5000 mAh பேட்டரி என்று அசத்தலாக வெளியாகியுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

Advertisment

Vivo Y12 Smartphone Features

6.35 இன்ச் எச்.டி திரை கொண்டது இந்த ஸ்மார்ட்போன் ஆகும். இதன் ரெசலியூசன் 1544×720 பிக்சல்கள் கொண்டுள்ளது.

4ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜூடன் கூடியது

அக்குவா ப்ளூ மற்றும் பர்கண்டி ரெட் Aqua Blue and Burgundy Red என இரண்டு நிறங்களில் இந்த போன் வெளியாகிறது.

மீடியாடெக் ஹெலியோ பி22 (MT6762) ப்ரோசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஐ.எம்.ஜி. பவர்.வி.ஆர். GE8320 கிராஃபிக்ஸ் ப்ரோசசர் யூனிட் (IMG PowerVR GE8320 GPU) பயன்படுத்தப்பட்டுள்ளது.

13 எம்.பி. ப்ரைமரி சென்சாரும், 8 எம்.பி. வைட் ஆங்கில் சென்சாரும், 2 எம்.பி. டெத் சென்சாரும் என மூன்று பின்பக்க கேமராக்களைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

வாட்டர் ட்ராப் ஸ்டைலுடன் கூடிய நோட்ச்சின் மையத்தில் 8 எம்.ப்பி. ஃப்ரண்ட் கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

டைம் லாப்ஸ், லைவ் போட்டோக்கள், எச்.டி.ஆர், போர்ட்ரைட் மோட், பனோரமா, மற்றும் போர்ட்ரைட் பூக் ஆகிய சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இதன் கேமராக்கள்.

ஃபிங்கர்ப்ரிண்ட் சென்சார் போனின் பின்பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்ட் 9 பை இயங்கு தளத்தை அடிப்படையாக கொண்டு ஃபன்டச் ஓ.எஸ் 9 ஸ்கின் இயங்கு தளத்தில் இயங்குகிறது இந்த ஸ்மார்ட்போன்.

4G VoLTE, dual-band Wi-Fi (2.4G+5G), Bluetooth 5.0, GPS, USB 2.0 port அனைத்தையும் சப்போர்ட் செய்கிறது இந்த போன்.

மேலும் படிக்க : தொலைந்து போன உங்களின் ஸ்மார்ட்போனை நீங்கள் கண்டுபிடிப்பது இனி மிக எளிது

Vivo Y12 Price

தொடர்ந்து பட்ஜெட் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணத்தில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருகிறது விவோ. இந்த போனின் விலை ரூ. 12,490 ஆகும்.

Vivo Smartphone
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment