ஆப்பிள் 8 அபார விற்பனை: கை கொடுத்த FIFA 2018

உலக அளவில் விற்றுத் தீர்ந்த ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8. இரண்டாவது இடத்தில் சாம்சங் கேலக்ஸி S9+, மற்றும் மூன்றாவது இடத்தில் ஆப்பிள் ஐபோன் எக்ஸ்.

இந்த வருட மே மாதத்தில் அதிகம் விற்பனையான செல்போன்களின் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறது ஆப்பிள் ஐபோன் 8. ரஷ்யாவில் நடக்கும் உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகளில் நடத்தப்படும் ப்ரோமசன் காரணமாக இந்த இடத்தைப் பெற்றுள்ளது ஐபோன் 8. சாம்சங் கேலக்ஸி S9+ ஏப்ரல் மாதத்தில் அதிக அளவு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவில் அதிகம் விற்பனையாகியுள்ள 10ல் 6 ஸ்மார்ட் போன்களின் சந்தை மதிப்பு என்பது 2% ஆகும். ஆனால் ஐபோன் 8 மற்றும் சாம்சங் கேலக்ஸி S9+ ஆகியவற்றின் சந்தை பங்கு 2.4% ஆகும்.

சாம்சங் கேலக்ஸி S9+ போன் இந்த வருடத்தின் பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்பட்டது. ஆப்பிளின் ஐபோன் 8, ஐபோன் 8 ப்ளஸ், ஐபோன் எக்ஸ் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது.

இந்த பட்டியலின் நான்காவது இடத்தில் சியோமி ரெட்மி 5A போன் நான்காவது இடத்திலும், ஐபோன் 8 ப்ளஸ் ஐந்தாவது இடத்திலும், சாம்சங் கேலக்ஸி S9 ஆறாவது இடத்திலும் உள்ளது.

சியோமி போன்களின் ஆஃப்லைன் விற்பனை ஏப்ரலில் 30% ஆக இருந்து, மே மாதத்தில் 35% ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் அதிக அளவு விற்பனையாகும் ஸ்மார்ட் போன்களின் பட்டியலில் சியோமி தொடர்ந்து முதல் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹவாய் P20 லைட் போன் ஏழாவது இடத்திலும், விவோ X21 எட்டாவது இடத்திலும் உள்ளது. விவோ X21 ஏப்ரலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றாகும். ஒன்பதாவது இடத்தில் ரெட்மீ நோட் 5 போனும், பத்தாவது இடத்தில் ஓப்போ A83 போனும் இடம் பெற்றுள்ளது.

×Close
×Close