இந்த மேக் ப்ரோவின் விலை வெறும் ரூ. 37 லட்சத்து 21 ஆயிரத்து 368 மட்டுமே!

இசைக்கலைஞர்கள், வீடியோ எடிட்டர்களுக்காகவே உருவாக்கப்பட்ட இந்த மேக் ப்ரோ அடுத்த வாரம் முதல் விற்பனைக்கு வருகிறது!

By: Published: December 11, 2019, 5:44:25 PM

Apple top-end Mac Pro costs Rs 37 lakhs : ஆப்பிள் நிறுவனம் ப்ரீமியம் கேட்ஜெட்களை மக்களுக்கு வழங்குவதில் புகழ் பெற்ற நிறுவனமாகும். ஒவ்வொரு வருடமும் செப்டம்பர்ப் மாதம் இந்த நிறுவனம் அறிமுகம் செய்யும் போன்களை வாங்குவதே குதிரைக் கொம்பான விசயம். சில வருடங்களுக்கு முன்பு வரை ரூ. 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை பணம் இருந்தால் ஐபோன்களை வாங்கி விடலாம். ஆனால் தற்போது ஒரு லட்ச ரூபாய் இல்லாமல் ஆப்பிள் போன்களைப் பற்றி யோசிக்கவே இயலாது.

தற்போது ஆப்பிள் நிறுவனம் மேக் ப்ரோ ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதன் விலையை கேட்டதும் பலருக்கும் மாரடைப்பே வந்துவிடலாம். இருந்தாலும் அந்த மேக் ப்ரோவின் விலையை கூறிவிடுகின்றேன். ரூ. 37 லட்சத்து 21 ஆயிரத்து 368 மட்டும் இருந்தால் இந்த மேக் ப்ரோ உங்களுக்கு தான். அமெரிக்க சந்தைகளில் இந்த மேக் புக்கின் விலை 52,599 அமெரிக்க டாலர்கள் ஆகும்.

Apple top-end Mac Pro specifications

இந்த மேக் ப்ரோ அனைவருக்குமான ஒரு ப்ரோடெக்ட் இல்லை என்பது உண்மை தான். இசை அமைப்பாளர்கள், வீடியோ எடிட்டர்கள், கலைஞர்கள் போன்றவர்களுக்காக இந்த டிவைஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

3.5GHz 8‑core இண்டெல் சியோன் W ப்ரோசசர் பொறுத்தப்பட்டுள்ளது. இதன் டர்போ பூஸ்ட் 4.0 ஜிகா ஹெர்ட்ஸ் ஆகும்

32ஜிபி டிடிஆர்4 ஈ.சி.சி. மெமரி பொறுத்தப்பட்டுள்ளது

ராடெயோன் ப்ரோ 580X -உடன் கூடிய 8GB of GDDR5 மெமரி

256ஜிபி எஸ்.எஸ்.டி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது

மேஜிம் மவுஸ் 2, மேஜிக் கீபோர்ட், லைட்டினிங் கேபிள் ஆகியவற்றுடன் இந்த மேக் ப்ரோ வருகிறது. ஆனால் 6கே ரெசலியூசன் கொண்ட ப்ரோ டிஸ்பிளே எக்ஸ்.டி.ஆரை தனியாக தான் வாங்க வேண்டும். அதன் விலை 4999 அமெரிக்க டாலர்கள் ஆகும். ஸ்டேண்ட்டின் விலை 1000 அமெரிக்க டாலர்கள் ஆகும்.  அடுத்த வாரம் முதல் இந்த மேக் ப்ரோ அமெரிக்காவில் விற்பனைக்கு வருகிறது. அமெரிக்காவின் புகழ்பெற்ற டெஸ்லா காரின் அறிமுக விலையைக் காட்டிலும் இந்த கணினியின் விலை அதிகம் என பலரும் அங்கலாய்த்து கொள்கிறார்கள்.

மேலும் படிக்க : குறைவான விலையில் மீண்டும் ஜியோவின் ப்ரீபெய்ட் திட்டங்கள்!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Technology News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Apple top end mac pro costs rs 37 lakhs

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X