Apple WWDC 2019 iOS 13 : ஐபோன்கள் மற்றும் ஐபேட்களுக்காக உருவாக்கப்பட்ட இயங்குதளம்... சிறப்பம்சங்கள் என்னென்ன?

இன்று முதல் 7ம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் புதிய ஓ.எஸ்.கள்களை அறிமுகம் செய்து வைக்கின்றது ஆப்பிள் நிறுவனம்.

இன்று முதல் 7ம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் புதிய ஓ.எஸ்.கள்களை அறிமுகம் செய்து வைக்கின்றது ஆப்பிள் நிறுவனம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Apple WWDC 2019 iOS 13

Apple WWDC 2019 iOS 13

Apple WWDC 2019 iOS 13 : ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர வேர்ல்ட்வைட் டெவலப்பர் மாநாடு (Worldwide Developer Conference (WWDC)) இன்று அமெரிகா, கலிஃபோர்னியா மாகாணத்தில் இருக்கும் சன் ஜோஸில் நடைபெற உள்ளது.  மெக்எனர்ஜி கன்வென்ஷனல் செண்டரில் நடைபெற இருக்கும் இந்த நிகழ்வில் சில முக்கியமான அப்டேட்டை வழங்க உள்ளது ஆப்பிள் நிறுவனம்.

Advertisment

போன்களுக்கான ஐ.ஓ.எஸ், லேப்டாப்களுக்கான மேக்ஓஎஸ் (macOS), வாட்ச்களுக்கான watchOS இயங்குதளங்களின் புதிய அப்டேட்டுகளுக்காக ஆப்பிள் வாடிக்கையாளர்கள் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.  இந்த வாரம் இறுதி வரை நீடிக்கும் இந்த மாநாடு ஜூன் 7ம் தேதியில் முடிவடைகிறது.

Apple WWDC 2019 iOS 13

இந்த நிகழ்வின் போது ஆப்பிள் போன்களுக்கான இயங்குதளமான ஐ.ஓ.எஸ் 13 செயல்வடிவம் விளக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் மற்றும் ஐபேட்களில் ஹோம்ஸ்க்ரீன்கள் முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் டார்க் மோட், ஃபைல் செயலிகளில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.  அதே நேரத்தில் புக்ஸ், மெயில், ஐமெசேஜ்கள், மேப் ஆகியவற்றிலும் மாற்றங்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபேடிற்கான ஐஓஎஸ் 13ல் சில முக்கிய அம்சங்கள் கொண்டுவரப்பட உள்ளது. ஒரே திரையில் பல்வேறு ஆப்களை பயன்படுத்தும் புதிய முறை அதில் அடங்கலாம். இந்த அப்டேட்டினை ஐபோன் எஸ்.ஈ., ஐபோன் 6, ஐபோன் 6 ப்ளஸ், ஐபோன் 5 எஸ், ஐபேட் மினி 2, மற்றும் ஐபேட் ஏர் போன்றவைகளில் பயன்படுத்த இயலாது என்று தகவல்கள் உலா வருகின்றன.

Advertisment
Advertisements

மேலும் படிக்க : வாடிக்கையாளர்களின் ப்ரைவசி குறித்த சுந்தர் பிச்சையின் கருத்திற்கு ஆப்பிள் பதிலடி…

இந்த நிகழ்ச்சி எப்போது துவங்குகிறது?

சான் ஜோஸில் இந்த நிகழ்ச்சி காலை 10 மணிக்கு (இந்திய நேரப்படி இன்று இரவு 10:30 மணிக்கு) இந்த நிகழ்வுகள் ஆரம்பமாகின்றது.

How to watch WWDC 2019 live?

ஐபோன், ஐபேட், மற்றும் ஆப்பிள் டிவிகளில் இடம் பெற்றிருக்கும் பிரத்தேக WWDC செயலியில் குறிப்பிட்ட நேரத்தில் இந்த நிகழ்ச்சியை நீங்கள் பார்க்கலாம். இந்த நிகழ்வு சுமார் 2 மணி நேரம் நடைபெறுகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: