வாடிக்கையாளர்களின் ப்ரைவசி குறித்த சுந்தர் பிச்சையின் கருத்திற்கு ஆப்பிள் பதிலடி…

வசதி படைத்தவர்களுக்கு மட்டும் தான் ப்ரைவசி என்ற கருத்திற்கு பதில் கூறிய ஆப்பிள், தங்கள் நிறுவனம் அனைத்து தரப்பட்ட மக்களுக்குமானது என்று அறிவித்துள்ளது.

By: Updated: May 29, 2019, 11:33:26 AM

Google CEO Sunder Pichai’s critics on Privacy : வாடிக்கையாளர்கள் ஆகிய நமக்குத் தான் தெரியும், ஆப்பிள் என்பது எவ்வளவு பெரிய நிறுவனம் என்றும், அதன் ப்ரோடெக்ட்களை வாங்குவது என்பது எவ்வளவு பெரிய பொருள் செல்வில் கொண்டு போய் நம்மை நிறுத்தும் என்பதும்.

ஆனால் ஆப்பிள் ப்ரோடெக்ட்கள் வாங்கி பயன்பாட்டிற்கு வைத்துக் கொண்டால், நம்முடைய தனிப்பட்ட விவகாரங்கள் அல்லது ப்ரைவசி முற்றிலுமாக பாதுகாக்கப்படும். இது ஆப்பிள் நிறுவனம் இத்தனை ஆண்டுகளாக இந்த துறையில், மக்கள் மத்தியில் சம்பாதித்து வைத்திருக்கும் நம்பிக்கை.

ஆனால் அதற்காக நாம் அவ்வளவு பெரிய தொகையை செலுத்தி ஒரு ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப் வாங்குவது என்பது மிகப் பெரும் கனவு தான். கூகுள் நிறுவனத்தின் தலைவர் சுந்தர் பிச்சை சமீபத்தில் ஆங்கில நாளிதழான தி நியூ யார்க் டைம்ஸில் ஒரு கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.

Google CEO Sunder Pichai’s critics on Privacy and Apple

இம்மாத ஆரம்பத்தில் கூகுளின் டெவலப்பர் மாநாடு நடைபெற்று முடிந்தது. அதனைத் தொடர்ந்து, அது தொடர்பாக கட்டுரை ஒன்றை அதில் எழுதியிருந்தார். அதில் மக்களின் ப்ரைவசி பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று. அது அவர்களின் அடிப்படை உரிமை. ஆனால் இன்றைய சூழலில் மிகவும் வசதி படைத்தவர்களால் வாங்கப்படும் உபகரணங்கள்/ஸ்மார்ட்போன்கள்/லேப்டாப்களில் மட்டுமே இது போன்ற ப்ரைவசி பாதுகாக்கப்பட்ட சூழல் உருவாகியுள்ளது. ப்ரைவசி என்பதே தற்போது வசதியானவர்களால் வைத்துக் கொள்ளப்படும் ஒரு பொருள் போல் மாறிவிட்டது என்று மறைமுகமாக ஆப்பிளைத் தாக்கி எழுதியுள்ளார்.

ஆப்பிள் நிறுவனத்தின் மென்பொருள் இயக்கத்தின் தலைவர் க்ரைக் ஃபெட்ரிகி சுந்தர் பிச்சையின் இந்த கருத்து குறித்து குறிப்பிடுகையில், ஆப்பிள் ப்ரொடெக்ட்டுகள் அனைத்தும், அனைத்து மக்களும் பயன்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டது என்றும், நிச்சயமாக வசதி படைத்தவர்களுக்கான ஒரு ப்ரொடக் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தி இண்டிபெண்ட் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் ”வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விஷயங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று மற்ற நிறுவனங்கள் பேசி வருவது மன நிறைவு தருகின்றது தான். ஆனால் அதற்கு அவர்களுக்கு குறைந்தது இரண்டு மூன்று மாதங்கள் தேவைப்படுகிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய சூழலில் கூகுள், ஆப்பிள், முகநூல் போன்ற பெரிய நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்கள் / பயனாளர்களின் ப்ரைவசியை பாதுகாக்க மிக துரிதமாக இயங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : இனிமேல் உங்களின் வாட்ஸ்ஆப் சாட்களை யாரும் ஸ்க்ரீன்ஷாட் எடுக்க முடியாது… நிம்மதி தரும் புதிய அப்டேட்கள்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Google ceo sunder pichais critics on privacy apple cos craig federighi responded

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X