scorecardresearch

இனிமேல் உங்களின் வாட்ஸ்ஆப் சாட்களை யாரும் ஸ்க்ரீன்ஷாட் எடுக்க முடியாது… நிம்மதி தரும் புதிய அப்டேட்கள்

ஸ்டேட்டஸில் விளம்பரங்களை ஒளிபரப்பும் வசதியை 2020ம் ஆண்டு முதல் கொண்டு வர உள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம். 

WhatsApp 13 New Features
WhatsApp 13 New Features

WhatsApp New Features Block Chat Screenshot : வாட்ஸ்ஆப் சில முக்கியமான சிறப்பம்சங்கள் தொடர்பான டெஸ்ட்டிங்கில் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டு வருகிறது. தற்போது பீட்டா வெர்ஷனில் டார்க் மோட், இன் – ஆப் ப்ரௌசிங், ரிவர்ஸ் இமேஜ் சர்ஜ், குரூப் ப்ரைவசி செட்டிங்ஸ், ஃபார்வர்ட் மெசேஜ்களை அளவுக்கு அதிகமாக அனுப்புவதை தடை செய்தல் என கிட்டத்தட்ட 13 சிறப்பம்சங்களுக்கான அப்டேட்டுகளை தர உள்ளது.  வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில் விளம்பரங்களை ஒளிபரப்பும் வசதியை 2020ம் ஆண்டு முதல் கொண்டு வர இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம்.

Fingerprint authentication and block chat screenshot

ஃபிங்கர் ப்ரிண்ட் ஆதண்டிகேசன் செயல்பாட்டிற்கு வந்தால், சாட்கள் எதையும் ஸ்கீரின்ஷாட் எடுக்க இயலாது. தற்போது ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் இயங்கு தளத்தில் செயல்பட்டு வரும் ஸ்மார்ட்போன்களில் இந்த் அப்டேட்டினை தர முழு முயற்சியுடன் இறங்கியுள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம்.

WhatsApp ads on Status

வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்களில் புதிதாக விளம்பரங்களை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது வாட்ஸ்ஆப். இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தற்போது வெற்றிகரமாக இயங்கி வரும் இந்த புதிய வசதி 2020ம் ஆண்டு முதல் வாட்ஸ்ஆப் செயலியிலும் செயல்படும். 2019 ஃபேஸ்புக் மார்கெட்டிங் மாநாட்டில், இந்த புதிய முயற்சி எப்படி செயல்படும் என்று விளக்கப்படும் ஒளிபரப்பப்பட்டது.

Dark Mode

ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் போன்களில் இயங்கும் வாட்ஸ்ஆப்பில் மிக விரைவில் இந்த சிறப்பம்சங்கள் கொண்டு வரப்படும். ஏற்கனவே 2.19.82 பீட்டா வெர்ஷனில் இது செயல்படுத்தப்பட்டாலும் தற்போது இதனை முடக்கி வைத்துள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம். இது ட்விட்டர் மற்றும் யூடியூப் டார்க் மோட்கள் செயல்படுவதைப் போல் செயல்படும்.

Share WhatsApp Status to Facebook Story

நீங்கள் இனிமேல் உங்களின் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸை ஃபேஸ்புக் ஸ்டோரியாக பதிவிடலாம். தற்போது இது சோதனை முயற்சியில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரையில் வாட்ஸ்ஆப்பில் ஆட் டூ ஃபேஸ்புக் ஸ்டோரி என்ற பட்டனை உருவாக்கி, அதில் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸை ஃபேஸ்புக் ஸ்டோரியாக பதிவிடலாம்.

Share contact via QR code

க்யூ.ஆர். கோட் மூலமாக நீங்கள் இனி காண்ட்டாக்ட் எண்களை அனுப்ப இயலும். க்யூ.ஆர். கோட் மூலமாக இன்ஸ்டாகிராம் ஃப்ரோபைல் அனுப்பப்படுவது போல் இவை அனுப்பப்படும்.

In-app browsing

2.19.74 இந்த வெர்ஷனில் இன் ஆப் ப்ரௌசிங்கிற்கான சோதனை ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. உங்களுக்கு அனுப்பப்படும் லிங்குகளை க்ளிக் செய்தால் அவை நேரடியாகவே வாட்ஸ்ஆப்பில் படித்துக் கொள்ளும் படி இவை உருவாக்கப்படும். தற்போது அனுப்பபடும் லிங்குகள் அனைத்தும் டீஃபால்ட் ப்ரௌசரில் தான் படிக்க இயலும்.

Reverse Image search

கூகுள் தளத்தில் இருப்பது போல் புகைப்படங்களை வைத்து அதன் சோர்ஸை தேடுவதற்கு பயன்படுவது தான் ரிவர்ஸ் இமேஜ் சர்ச். பிரச்சனைகள் ஏதுமற்ற சிறந்த அப்டேட்டாக இதனை வாடிக்கையாளர்களுக்கு தரும் முயற்சியில் இறங்கியுள்ளது வாட்ஸ்ஆப் செயலி.

மேலும் படிக்க : புதிதாக வெளிவர இருக்கும் சியோமி போனின் விலை என்ன தெரியுமா ?

Group privacy settings

இந்த அப்டேட் மூலமாக, இனி எவர் நினைத்தாலும் உங்களை க்ரூப்பில் இணைப்பதை முற்றிலுமாக தடுக்க இயலும். மிக விரைவில் இந்த அப்டேட் வெளியாக உள்ளது. ப்ரொபைல், அபௌட் ஆகியவற்றை பார்ப்பதற்கு இருக்கும் அதே நோபடி, மை காண்டாக்ட்ஸ் மற்றும் எவ்ரிஒன் என்ற ஆப்சன்கள் இதிலும் பயன்படுத்தப்படும்.

Frequently forwarded message info

2.19.80 என்ற பீட்டா வெர்ஷனில் இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதன் மூலம் உங்களுக்கு ஃபார்வர்ட் செய்யப்படும் ஒரு செய்தி எத்தனை முறை ஃபார்வர்ட் செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள இயலும். நிறைய முறை ஃபார்வர்ட் செய்யப்பட்டால், அதிகம் பகிரப்பட்ட செய்தி என்ற டேக்குடன் இந்த மெசேஜ்கள் உங்களுக்கு வரும்.

Group admins can restrict frequently forwarded messages

தற்போது க்ரூப் அட்மின்கள் தங்கள் க்ரூப்களில் வரும் ஃபார்வர்ட் மெசேஜ்களின் எண்ணிக்கையை தடுக்க இயலும். 2.19.97 என்ற பீட்டா வெர்ஷனில் இது சோதனை செய்யப்பட்டு வருகிறது.  frequently forwarded messages – என்ற டேக்குடன் ஒரு மெசேஜ் வருகிறதென்றால் அதை க்ரூப்பில் ஷேர் பண்ணுவதை தடுக்க அட்மினால் முடியும். அலோ மற்றும் டோண்ட் அலோ (“Allow” and “Don’t allow”) என்ற ஆப்சன்களுடன் இவை வெளியாகும்.

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Whatsapp new features block chat screenshot and 12 new updates

Best of Express