/tamil-ie/media/media_files/uploads/2019/03/cats-3.jpg)
Apple’s foldable iPhone
Apple’s foldable iPhone : மொபைல் தொழில்நுட்பத்தில் மைல்கல்லாக அமைந்திருந்தது தற்போது வெளியாகியுள்ள ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்கள். கேலக்ஸி எஸ் சீரியஸ் போன்கள் வெளியானதன் 10ம் வருட கொண்டாட்டத்தில் சாம்சங் நிறுவனம் சான்பிரான்சிஸ்கோவில் சாம்சங் கேலக்ஸி ஃபோல்டபிள் போனை வெளியிட்டது.
அதன்பிறகு ஸ்பெயினில் இருக்கும் பாபிலோனாவில் நடைபெற்ற மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் மாநாட்டில் ஹூவாய் நிறுவனத்தின் ஹூவாய் மேட் எக்ஸ் போன் வெளியிடப்பட்டது.
மேலும் படிக்க : எது சிறந்த மடக்கு ஸ்மார்ட்போன்... ஹூவாய் மேட் எக்ஸ் Vs சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்
Apple’s foldable iPhone சிறப்பம்சங்கள்
தலை சிறந்த ஸ்மார்ட்போன்களை உருவாக்கும் நிறுவனங்கள் அனைத்திற்கும் முன்னோடியாக கருதப்படும் ஆப்பிள் நிறுவனமும் தங்களின் ஸ்மார்ட்போனை உருவாக்கும் திட்டத்தில் மிக தீவிரமாக இயங்கி வருகிறது.
தற்போது அமெரிக்காவின் பேட்டண்ட் மற்றும் ட்ரேட்மார்க் அலுவலகத்தில் ஆப்பிள் நிறுவனம் “ஃப்ளக்ஸிபிள் டிஸ்பிளேயுடன் கூடிய எலக்ட்ரானிக் டிவைஸ்கள்” என்று புதிய வடிவம் ஒன்றிற்கு பேட்டண்ட் ரைட்டை பெற்றுள்ளது.
ஆட்டோமேட்டிக்காக ஹூட்டாகும் ஃபோல்டபிள் ஸ்கிரினிற்கான காப்புரிமம் அதுவாகும். இதனை பயன்படுத்துவதால் போன்கள் அதிக குளிரான காலத்திலும் விரிசல் விட்டு உடையாமல் இருக்கும்.
பெண்டாகும் ஆக்சிஸில் தான் இந்த ஹீட்டிங்க் எலமெண்ட்டுகள் பொருத்தப்பட்டு, தானாக திரை சூடாகும் தொழில் நுட்பத்தை உருவாக்க இருப்பதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
அடுத்த ஆண்டிற்குள் இந்த போன் வாடிக்கையாளர்களின் பயன்பாட்டிற்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓப்போ, சியோமி, மோட்டோ ஆகிய ஸ்மார்ட்போன்கள் வரிசையாக ஃபோல்டபிள் போன்களை வெளியிட காத்திருக்கின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.