60 மில்லியன் இசைப் பிரியர்களின் நண்பனாக மாறிய ஆப்பிள் மியூசிக்

Apple Music Subscribers : ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த மிகப்பெரிய இலக்காக அமைய இருக்கும் எலக்ட்ரானிக் டிவைஸ் ஆப்பிள் டிவி ஆகும்.

Apple’s Music Streaming Service Apple Music has 60 Million Users:  ஆப்பிள் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், ஆப்பிள் மியூசிக்கை பயன்படுத்தும் பயனாளிகளின் எண்ணிக்கை 60 மில்லியனை கடந்து விட்டது என்று கூறியுள்ளது. உலகின் முதல்நிலை மியூசிக் ஸ்ட்ரீமிங் ப்ளாட்பார்மான ஸ்போட்டிஃபை 100 மில்லியன் பயனாளிகளைக் கொண்டுள்ளது.

ஆப்பிள் மியூசிக் ப்ளாட்ஃபார்மின் தலைவர் எட்டி க்யூ இது குறித்து கூறுகையில், ஆப்பிள் மியூசிக் அறிமுகம் செய்து நான்காண்டுகளை கடந்த பிறகு தற்போது 60 பயனாளிகளை பெற்றுள்ளது.  கடந்த மே மாதம் 50 மில்லியன் வாடிக்கையாளர்களை ஆப்பிள் மியூசிக் கொண்டிருந்தது என்பது கூறினார்.

மேலும் படிக்க : வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸை இனி நீங்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமிலும் ஷேர் செய்யலாம்! வெளியானது புதிய அப்டேட்

79 நாடுகளில் தற்போது இயங்கி வரும் ஸ்போட்டிஃபைக்கு உலகம் முழுவதும் 217 மில்லியன் பயனாளிகள் உள்ளன. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 100 மில்லியன் ப்ரீமியம் வாடிக்கையாளர்களை ஸ்பாட்டிஃபை எட்டியது. ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த மிகப்பெரிய இலக்காக அமைய இருக்கும் எலக்ட்ரானிக் டிவைஸ் ஆப்பிள் டிவி ஆகும். இந்த வருடத்தின் இறுதியில் இந்த டிவி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அமேசான் ப்ரைம் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் போன்ற வீடியோ ஸ்ட்ரீமிங் அம்சங்களுடன் அந்த டிவி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க : 80 நாட்களில் 10 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்றுத் தீர்த்த சாம்சங் கேலக்ஸி S10 5G

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close