Asus ROG : ஆசூஸ் நிறுவனத்தின் முதல் Gaming Phone இந்தியாவில் அறிமுகமாகிறது. ஜூன் மாதம் நடைபெற்ற கம்ப்யூட்டெக்ஸ் மாநாட்டில் இந்த போன் பற்றிய அறிவிப்பினை வெளியிட்டது தைவானைச் சேர்ந்த ஆசூஸ் நிறுவனம். 3டி vapour-chamber கூலிங் சிஸ்டத்துடன்
Advertisment
வெளியாகும் முதல் போன் இதுவே.
Asus ROG சிறப்பம்சங்கள்
அல்ட்ராசோனிக் ஏர் ட்ரிகர் ட்ச் சென்சார், லேண்ட்ஸ்கேப் மோட், ஏ.எம்.ஓ.எல்.ஈ.டி (AMOLED) திரையுடன் கூடிய ஹெச்.டி.ஆர் பேக்காக வெளியாகியுள்ளது இந்த மொபைல். குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 845 ப்ரோசசர் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கிராபிக்ஸ் ப்ரோசசர் யூனிட்டாக குவால்கோம் அட்ரெனோ 630 பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த போனின் இந்தியாவிற்கான அறிமுக விழாவினை யூடியூபில் லைவாக பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அமெரிக்காவில் கடந்த மாதம் இந்த போன் வெளியானது. 128 ஜிபி மற்றும் 512 ஜிபி வேரியண்ட்டுகளுடன் வெளியான போன்களின் விலை முறையே $899 (ரூ. 63,400) மற்றும் $1,099 (ரூ. 77,500).
இதர சிறப்பம்சங்கள்
6 இன்ச் அளவுள்ள இந்த போன் ஆண்ட்ராய்ட் 8.1 ஓரியோ இயங்கு தளத்தில் இயக்கப்படுகிறது. RAM செயல்திறன் 8 ஜிபியாகும். இரட்டைப் பின்பக்க கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. அதன் செயல் திறன் 12 எம்.பி மற்றும் 8 எம்.பி ஆகும். செல்ஃபி கேமராவின் செயல் திறன் 8 மெகா பிக்சல் ஆகும்.