ஒன்ப்ளஸ் 7 ப்ரோவுக்கு போட்டியாளர் ரெடி... களம் இறங்கியது அசூஸ் ஜென்ஃபோன் 6 !

ஐ.பி. ரேட்டிங், இன் - டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் மற்றும் வையர்லெஸ் சார்ஜர் இல்லாதது குறையாக பார்க்கப்படுகிறது. 

ஐ.பி. ரேட்டிங், இன் - டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் மற்றும் வையர்லெஸ் சார்ஜர் இல்லாதது குறையாக பார்க்கப்படுகிறது. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Asus 6Z Smartphone Price, specifications, launch

Asus 6Z Smartphone Price, specifications, launch

Asus Zenfone 6 Specifications : மே 14ம் தேதி வெளியானது ஒன்ப்ளஸ் போனின் 7 மற்றும் 7 ப்ரோ மாடல். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இந்த ப்ரீமியம் போன். தற்போது மார்க்கெட்டில் இதற்கு போட்டியாக புதிய போன் ஒன்றை வெளியிட்டுள்ளது அசூஸ் நிறுவனம். அசூஸ் ஜென்ஃபோன் 6 போனின் விலை 499 யூரோக்கள் ஆகும். இந்திய விலையில் 39 ஆயிரத்தை தொடும் இந்த போன். இந்த போனின் சிறப்பம்சங்கள் மற்றும் இதர முக்கிய அம்சங்கள் என்னென்ன ?

Asus Zenfone 6 Specifications

Advertisment

அசூஸ் நிறுவனத்தின் புதிய போன் நேற்று வெளியானது. 180 டிகிரி வைட் ஆங்கிள் செல்ஃபி கேமராவும், 855 ஸ்நாப்ட்ராகன் ப்ரோசசரும் இந்த போனின் ஹைட்லைட்களாக இருக்கின்றது. இதன் ஆரம்ப போனின் விலை 499 யூரோக்கள் ஆகும்.

Asus Zenfone 6 Design

இந்த சீரியஸில் முன்னரே வெளியான மாடல்களில் இருக்கும் சிக்னேச்சர் க்ளாஸ் மற்றும் மெட்டல் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் முற்றிலும் வித்தியசமான வடிவமைப்புடன் வெளியாகியுள்ளது.

Storage and Varients

6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் வேரியண்ட்கள் மற்றும் 64ஜிபி,128ஜிபி, மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்களுடன் வெளியாகியுள்ளது இந்த போன். ஹெட்போன் ஜாக் மற்றும் மூன்று கார்ட்களுக்கான ஸ்லாட்டும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.

Finger Print Scanner

Advertisment
Advertisements

பிங்கர் பிரிண்ட் சென்சார் போனின் பின்பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் ஒன்ப்ளஸ் 7 ப்ரோவில் இன் - டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் இடம் பெற்றிருந்தது.

மேலும் படிக்க : இந்த விலைக்கு இத்தனை சிறப்பம்சங்களுடன் ஒரு போனா ?

Asus Zenfone 6 Camera

இதற்கு முன்பு எந்த போனிலும் இடம் பெறாத வித்தியசமான கேமரா வடிவமைப்பினை பெற்றுள்ளது இந்த போன்.  முன்பக்க, பின்பக்க கேமராக்கள் என தனித்தனியாக பொருத்தாமல், ஃப்ளிப் மெக்கானிசம் மூலமாக இரட்டைக் கேமராக்களை பொருத்தி சாதனை படைத்திருக்கிறது அசூஸ்.

Asus Zenfone 6 Specifications, Asus Zenfone 6 Flip Camera

சோனியின் IMX586 கேமரா சென்சார், செயல்திறன் 48 எம்.பி மற்றும் 13 எம்.பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா பின்பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ளது. செல்ஃபி எடுக்க வேண்டும் என்றால் ஆட்டோமேட்டிக்காக அந்த ஃப்ளிபிங் டெக்னாலஜி கேமராக்களை முன்பக்கம் நகர்த்துகிறது.

இதர சிறப்பம்சங்கள்

5000 mAh பேட்டரி ( ஒரு முறை சார்ஜ் செய்தால் நாள் முழுவதும் பயன்படுத்திக் கொள்ளலாம்)

ஆண்ட்ராய்ட் 9.0 பை இயங்கு தளத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட  ZenUI 6 இயங்கு தளத்தில் இயங்குகிறது.

ஐ.பி. ரேட்டிங், இன் - டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் மற்றும் வையர்லெஸ் சார்ஜர் இல்லாதது குறையாக பார்க்கப்படுகிறது.

Asus Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: