Advertisment

Asus ZenFone Max Pro M2 : ரெட்மீ நோட் 6 ப்ரோவிற்கு போட்டியாக களம் இறங்கும் ஆசூஸின் பட்ஜெட் போன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Asus ZenFone Max Pro M2

Asus ZenFone Max Pro M2

Asus ZenFone Max Pro M2 : ஆசூஸின் புதிய போனை டிசம்பர் 11ல் அறிமுகப்படுத்த இருக்கிறது அந்நிறுவனம். ப்ளிப்கார்ட் இணைய தளத்தில் 11ம் தேதி முதல் விற்பனை செய்யப்படும். ஏற்கனவே களம் இறங்கியிருக்கும் ரெட்மீ நோட் 6 ப்ரோ மற்றும் ரியல் மீ 2 ப்ரோ போன்களுக்கு போட்டியாக வந்துள்ளது இந்த போன்.

Advertisment
November 2018

Asus ZenFone Max Pro M2 சிறப்பம்சங்கள்

நோட்ச் 2 திரையுடன் க்ளாஸி ஃபினிஷ் டச்சில் வெளியாகிறது இந்த போன்

6.3 இன்ச் ஃபுல் எச்.டி திரையில் 2280 x 1080 பிக்சல்கள் மிகத் தெளிவான மற்றும் துல்லியமான பயன்பாட்டிற்கு உதவுகிறது

ஸ்நாப்ட்ராகன் குவால்கோம் 660 ப்ரோசசருடன் வெளியாகும் இந்த போனின் ரேம் (RAM) செயல்பாடு 4ஜிபி.

ஸ்டோரேஜ் வேரியெண்ட்கள் 64ஜிபி மற்றும் 128 ஜிபி ஆகும்.

மைக்ரோ எஸ்.டி ஸ்லாட் மூலமாக 2 டிபி (TB) வரை எக்ஸ்டெண்ட் செய்து கொள்ளலாம்.

அளவு : 157.9 mm x 75.5 mm x 8.5 mm எடை : 175 கிராம்கள்

கேமரா : இரட்டை பின்பக்க கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. ப்ரைமரி கேமரா 12MP Sony IMX486 சென்சார் பொருத்தப்பட்டிருக்கிறது. இரண்டாம் கேமரா 5MP ஆகும்.

செல்ஃபி கேமரா : எல்.இ.டி ப்ளாஷ் மற்றும் டிஃப்யூஸ் லைட்டுடன் கூடிய 13 MP கேமரா சென்சார். 4K மற்றும் அல்ட்ரா எச்.டி. தொழில்நுட்பங்களை ஆதரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இயங்குதளம் ஆண்ட்ராய்ட் ஓரியோ 8.1

மேலும் படிக்க : 6000 ரூபாய்க்கு குறைவான விலையில் வெளியாகும் ஆசூஸின் பட்ஜெட் போன்

Asus ZenFone Max Pro M2 விலை

இந்த போனின் முந்தைய வெர்சனான ZenFone Max Pro M1வின் விலை இந்தியாவில் ரூ. 10,999 ஆகும். இந்த போனின் விலை ரூ. 12,999 இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போனுடன் மற்றொரு போனும் நாளை வெளியாகிறது. இந்தியாவில் பகல் 12.30 மணிக்கு வெளியாகும் இந்த போனின் அறிமுக விழாவினை லைவ்  ஸ்ட்ரீமிங்கில் கண்டு களிக்கலாம்.

மேலும் படிக்க : Asus Zenfone Max M2 : பட்ஜெட் போன்களை மட்டும் களம் இறக்கும் ஆசூஸ் நிறுவனம்...

Asus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment