அதேர் 450 எலெக்ட்ரிக் பைக் : சிட்டி பேர்ட்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஸ்கூட்டர்

Ather energy 450 electric scooter price : சென்னையில் இருக்கும் எக்ஸ்க்ளூசிவ் ஷோரூமில் இதன் விலை ரூ. 1 லட்சத்து 24 ஆயிரத்து 750 ஆகும்.

Ather energy 450 electric scooter price : சென்னையில் இருக்கும் எக்ஸ்க்ளூசிவ் ஷோரூமில் இதன் விலை ரூ. 1 லட்சத்து 24 ஆயிரத்து 750 ஆகும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
EBike Ather energy 450 electric scooter, Ather energy 450 electric scooter specifications, price, chennai showroom price

Ather energy 450 electric scooter specifications, price, chennai showroom price

EBike Ather energy 450 electric scooter : ஒரு பக்கம் ஆட்டோமொபைல் சந்தை முற்றிலும் சரிவை சந்திக்கின்ற இந்த நேரத்தில் எலெக்ட்ரிக் கார்கள், பைக்குகள் உற்பத்தி சூடுபிடித்து வருகிறது. அதர் எனெர்ஜி நிறுவனம் சமீபமாக இரண்டு ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. அதர் 450 மற்றும் 340 என்ற இந்த இரண்டு மாடல்கள் அறிமுகமாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

EBike Ather energy 450 electric scooter - சிறப்பம்சங்கள்

Advertisment

அதர் முழுக்க முழுக்க சிட்டி பேர்ட்களுக்காக தயாரிக்கப்பட்ட ஒன்று. மணிக்கு 80 கீ.மீ வேகம் வரை இதில் பயணிக்க இயலும். பைக்கை ஸ்டார்ட் செய்த 3.9 நொடிகளில் 0-40 கி.மீ வேகத்தினை அடைய இயலும். ஆனால் இதன் விலை தான் கொஞ்சம் மூச்சடைக்க வைக்கின்றடத்து. நான்கு ஸ்கூட்டர்களுக்கு பதிலாக ஒரு காரை வாங்கிவிடலாம். சென்னையில் இருக்கும் எக்ஸ்க்ளூசிவ் ஷோரூமில் இதன் விலை ரூ. 1 லட்சத்து 24 ஆயிரத்து 750 ஆகும்.

இந்த பேட்டரி இருந்தால் 30 நிமிடங்களில் உங்களின் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யலாம்

அதர் நிறுவனம் ஐ.ஐ.டி. சென்னையில் படித்து பட்டம் பெற்ற தருண் மேத்தா மற்றும் ஸ்வாப்னில் ஜெய்ன் என்பவர்களால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஈக்கோ மோட், ஸ்போர்ட்ஸ் மோட், ரைட் மோட் என்று மூன்று மோட்களில் இந்த வண்டியை நீங்கள் இணைக்கலாம்.

Advertisment
Advertisements

இந்த வண்டியின் டேஷ் போர்டினை நீங்கள் நேரடியாக உங்கள் ஸ்மார்ட்போன் மூலமாக கண்ட்ரோல் செய்து கொள்ள இயலும். அதர் பைக்கின் செயலியை நீங்கள் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.  2.4 kWh லித்தியம் ஐயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.  5.1 கி.வாட் மோட்டர் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

2 மணி நேரம் சார்ஜ் செய்தால் 80% வரை சார்ஜ் ஆகும். ஃபுல் சார்ஜ்க்கு 4 அரை மணி நேரம் தான் ஆகும்.  அலுமினிய உலோகத்தால் உருவாக்கப்பட்டுள்ள இந்த பைக் முழுக்க முழுக்க சிட்டி ரைடிங்கிற்காக தான். ஒரு வேளை வழியில் சார்ஜ் தீர்ந்துவிட்டால் சென்னையில் 10 இடங்களில் சார்ஜிங் பாய்ண்ட்களில் ஏதேனும் ஒரு இடத்தில் நீங்கள் சார்ஜ் செய்து கொள்ளலாம். கையோடு எடுத்துக் கொண்டு செல்லும்படியான போர்ட்டபிள் சார்ஜரும் உள்ளன.

மேலும் படிக்க : Electric Bikes : அல்ட்ரா மார்டன் பெண்களுக்காக அசத்தலான 3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்

Automobile

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: