New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/02/page-2.jpg)
பிப்ரவரி 7 முதல் 12 தேதி வரை நொய்டாவில் நடைபெற்றது ஆட்டோ எக்ஸ்போ. அந்த கண்காட்சியில் வெளியிடப்பட்ட மிகவும் ஸ்டைலான கார்களின் புகைப்பட அணிவகுப்பு இதோ உங்களுக்காக. பஸ்கள், கார்கள், ஸ்போர்ட்ஸ் பைக்குகள், ஹையர் எண்ட் ஸ்கூட்டர்கள், இருவர் மட்டும் பயணிக்க வகை செய்யும் கார்கள் என அசத்தலாக நடந்து முடிந்த ஷோவில் அனைவரையும் ஆச்சரியப்படுத்திய வாகனங்கள் இதோ!
Advertisment
இந்த வருட அணி வகுப்பின் ஷோஸ்டாப்பர் இந்த பஸ் தான். பார்க்க எவ்வளவு அழகாக இருக்கிறது?
க்ளாசிக் ரெனால்ட் ட்விஸி(Renault Twizy) ... புகைப்படத்தில் இருப்பது ரெனால்ட் இந்தியாவின் சி.இ.ஓ வெங்கட்ராம் மாமிள்ளப்பள்ளே மற்றும் இந்தியாவுக்கான ஃபிரான்ஸ் தூதர் இமானுவேல் லெனாய்ன்.Advertisment
Advertisements
கடந்த வருடங்களைப் போன்றே இந்தவருடமும் ஹையர் எண்ட் பைக்குகளும் ஸ்கூட்டர்களும் வெளியாகிறது. இந்த பைக் ஏப்ரிலியாவின் RSV4 ( Aprilia RSV4)
சுஸூக்கி நிறுவனத்தில் இருந்து அறிமுகம் செய்யப்பட்ட ஹையபுசா (Suzuki Hayabusa). இந்த பைக்குகளின் ஸ்திரமான கட்டமைப்பும், அதிகம் தரும் மைலேஜூம் அனைவரின் மனதையும் கவர்ந்தது./tamil-ie/media/media_files/uploads/2020/02/85176886_2672612779504507_1538224352170868736_o.jpg)
எஸ்.யு.வி என்றால் யாருக்கு தான் பிடிக்காது. ஜிஎம் இந்தியாவின் ஹாவெல் எச் 9
எலெக்ட்ரிக் கார்களுக்கு வருகின்ற வருடங்கள் எல்லாம் 'பூமிங்’ தான். கண்ணைப் பறிக்கும் கொள்ளை அழகு சிவப்பு நிறத்தில் வெளியாகியிருக்கும் வோக்ஸ்வேகனின் ஐ.டி.க்ராஸ் இதோ! (IDCrozz)/tamil-ie/media/media_files/uploads/2020/02/86180362_2670870656345386_5642993750226501632_o.jpg)
சாலைகளே இல்லாத மலைப்பாதைகளில் பயணிக்க என்ன ஒரு சரியான கார் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அல்லது கடற்கரை மணலிலும் ஓட்டிச் செல்லலாம். இதனுடைய கம்பீரமான தோற்றத்தை பார்த்தாலே ஒரு பாதுகாவலனைப் போல் இருப்பதால் தான் ஃபோர்ஸ் நிறுவனம் இந்த வண்டிக்கு கூர்கா ( Force Motors Ltd.’s Gurkha) என்று பெயர் வைத்துள்ளது
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவித வாகன தேவைகள் இருக்கும். அனைத்தையும் சிறப்பாய் பூர்த்தி செய்துள்ளது இந்த கார் ஷோ.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us