Advertisment

Best Budget Smartphones 2019 : இந்த ஆண்டு வெளியான சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் எது?

Best Budget Android Phones, 2019 : டூயல் ரியல் கேமரா செட்-அப் மற்றும் ஹேலியோவின் பி70 ப்ரோசசருடன் ரூ.10 ஆயிரம் விலையில் விற்பனைக்கு வந்தது இந்த ஸ்மார்ட்போன்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Best Budget Smartphones In India in 2019 under Rs. 11,000

Best Budget Smartphones In India in 2019 under Rs. 11,000

Best Budget Smartphones In India in 2019 under Rs. 11,000 :  இந்த ஆண்டில் வெளியான சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் பற்றிய கட்டுரை இது. 2019ம் ஆண்டில் ரூ.6000 முதல் ரூ.11 ஆயிரம் வரை விற்பனைக்கு வைக்கப்பட்ட போன்கள் குறித்து நீங்கள் இங்கே அறிந்து கொள்ளலாம்.

Advertisment

உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டுமா ??

ரியல்மீ 3 - Realme 3

நிறைய சிறப்பம்சங்களுடன் இந்த ஆண்டு வெளியான பட்ஜெட் போன்களில் மிகவும் முக்கியமான ஸ்மார்ட்போன் இதுவாகும். டூயல் ரியல் கேமரா செட்-அப் மற்றும் ஹேலியோவின் பி70 ப்ரோசசர் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டது. இதன் விலை ரூ. 10 ஆயிரத்திற்கும் குறைவு தான். மேலும் படிக்க : ஆப்பிளைப் போன்றே ரியல்மீ பட்ஸ் ஏர்… எக்கச்சக்க எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்கள்

ரியல்மீ 3ஐ - Realme 3i

ரியல்மீ 3 ஸ்மார்ட்போனின் குறைந்த பட்ஜெட் வெர்ஷனாக அறிமுகமானது இந்த ஸ்மார்ட்போன். இது ரியல்மீ 3 மற்றும் ரியல்மீ சி2-வுக்கு இடையிலான சிறப்பம்சங்கள் மற்றும் வடிவமைப்புடன் வெளியானது. டைமன்ட் ஷேப்புடன் வெளியான சிவப்பு கலர் ஸ்மார்ட்போனில் மயங்காதவர்கள் யாரும் இல்லை என்று தான் கூற வேண்டும். இதன் விலை ரூ. 7999 ஆகும். மேலும் படிக்க : ரூ. 8000 பட்ஜெட்டில் அசத்தலாக அறிமுகமான ரியல்மீ 3i! ஏக குஷியில் வாடிக்கையாளர்கள்…

சாம்சங் கேலக்ஸி எம்30 - Samsung Galaxy M30

இந்த ஸ்மார்ட்போன் எம் சீரியஸில் வெளியான மிகவும் காஸ்ட்லியான போன்களில் ஒன்றாகும். ஃபுல் எச்.டி. திரை மற்றும் சூப்பர் ஏம்.எம்.ஓ.எல்.ஈ.டி டிஸ்பிளே, 5,000mAh பேட்டரி, மூன்று பின்பக்க கேமரா என அசத்தலாக வெளியானது. மேலும் படிக்க :Samsung Galaxy M30s : ”ஒரு முறை சார்ஜ் செய்தால் 4 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்”

ரெட்மி நோட் 8 - Redmi Note 8

ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் என்றால் நாங்கள் தான் என்பதை மறுபடியும் நிரூபித்தது ரெட்மி நிறுவனம். 48 எம்.பி. குவாட் ரியர் கேமரா, ஸ்நாப்ட்ராகன் 665 ப்ரோசசர் என சிறப்பம்சங்களை கொண்டு ரூ. 9999க்கு வெளியானது இந்த ஸ்மார்ட்போன். மேலும் படிக்க : ரெட்மி நோட் 8 ப்ரோ : 64 எம்.பி. கேமராவில் எடுத்த புகைப்படங்கள் அபாரம்

விவோ யூ10 - Vivo U10

இந்த ஆண்டில் வெளியான விவோவின் ஆன்லைன் எக்ஸ்க்ளூசிவ் யூ சீரிஸ் ஸ்மார்ட்போன் இதுவாகும். ப்ரீமியம் வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்களுடன் வெளியான இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 8,990 ஆகும். மூன்று பின்பக்க கேமராக்களையும், ஸ்நாப்ட்ராகன் 665 ப்ரோசசரையும் இந்த ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது. 5,000mAh பேட்டரி இதன் ஹைலைட் ஆகும். மேலும் படிக்க : இந்த வாரம் பட்ஜெட் போன்கள் வாரம் : விவோ யூ10 ஸ்மார்ட்போன் ஒரு பார்வை

ரெட்மி 7S - Redmi 7S

48 எம்.பி. கேமராவுடன் வெளியான இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலையே ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவாகவே தான் இருந்தது. இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட வெர்சனாகும். ரெட்மி நோட் 7, 12 எம்.பி கேமராவுடன் வெளியான ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment