ஏர்டெல் Vs வோடபோன் Vs ஜியோ : ரூ.100க்குள் சிறந்த டேட்டா டாப் அப் ப்ளான்கள் எது ? 

98 ரூபாய் ப்ளானில் 28 நாட்களுக்கு 3ஜிபி டேட்டாவை 4ஜி/3ஜி/2ஜி அலைவரிசையில் வழங்குகிறது.

tarrif hike, latest prepaid plans, Reliance Jio vs Airtel vs Vodafone New Prepaid Plans
Reliance Jio hikes mobile tariff rates

Best Data Plans Under Rs.100 : ஏர்டெல், வோடபோன், மற்றும் ஜியோ நிறுவனங்கள் மாற்றி மாற்றி சிறந்த ப்ரீபெய்ட், போஸ்ட் பெய்ட் ப்ளான்களை தங்களின் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. சில பேக்குகள் நாள் ஒன்றிற்கு 3ஜிபி டேட்டா வரை தருகிறது. ஆனால் அவை அனைத்தும் 200, 250, மற்றும் 300 ரூபாய் என்ற அளவில் ரீசார்ஜ் செய்ய வேண்டிய சூழலுக்கு நம்மை தள்ளுகிறது.

ஆனால் குறைந்த கட்டணத்தில் கொடுக்கப்படும் பேக்குகள் பற்றி ஒரு பார்வை. ஏன் எனில் மாதக் கடைசியில் இது தான் பெரிய உதவியாக நமக்கு இருக்கும்.

Reliance Jio Best Data Plans Under Rs.100 : ரிலையன்ஸ் ஜியோ டேட்டா ப்ளான்கள் ரூ.11/ரூ.21/மற்றும் ரூ.51

ரிலையன்ஸ் ஜியோவில் மூன்று டாப்-அப் ஆஃபர்கள் 100 ரூபாய்க்குள் வருகிறது. ரூ.11/ரூ.21/ரூ.51 என இருக்கும் அந்த ப்ளான்களில் 11 ரூபாய்க்கான டாப்-அப்பில் 400 எம்.பி. 4ஜி டேட்டா கிடைக்கும். 21 ரூபாய்க்கான ப்ளானில் 1ஜிபி 4ஜி டேட்டாவும், 51 ரூபாய்க்கான ப்ளானில் 3ஜிபி 4ஜி டேட்டாவும் கிடைக்கும்.

Airtel Best Data Plans Under Rs.100 ( ஏர்டெல் டேட்டா ப்ளான்கள் )

ஏர்டெல்லும் மூன்று டேட்டா ப்ளான்களை அண்டர் 100 கேட்டகிரியில் அளிக்கிறாது.

29 ரூபாய்க்கு 520 எம்பி 3ஜி/4ஜி டேட்டாவை வழங்குகிறது

48 ரூபாய்க்கு 1ஜிபி 3ஜி மற்றும் 4ஜி டேட்டா

98 ரூபாய்க்கு 3ஜிபி 3ஜி மற்றும் 4ஜி டேட்டாவை வழங்குகிறது ஏர்டெல்.

வேலிடிட்டி 28 நாட்களாகும்.

Vodafone Best Data Plans Under Rs.100 (வோடபோன் டேட்டா பிளான்கள்)

வோடபோனும் மூன்று டேட்டா ப்ளான்களை அறிமுகம் செய்துள்ளது.

27 ரூபாய்க்கு 450 எம்.பி 4ஜி/3ஜி/2ஜி டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்குகிறது.

49 ரூபாய் ப்ளானில் 1ஜிபி 4ஜி/3ஜி/2ஜி டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்குகிறது.

98 ரூபாய் ப்ளானில் 28 நாட்களுக்கு 3ஜிபி டேட்டாவை 4ஜி/3ஜி/2ஜி அலைவரிசையில் வழங்குகிறது.

மேலும் படிக்க : சாம்சங் கேலக்ஸி எஸ் 10 பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் என்ன என்று  தெரியுமா ?

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Best data plans under rs 100 jio vs airtel vs vodafone

Next Story
சன் டிடிஎச் வாடிக்கையாளர்களுக்கு இனி என்.சி.எஃப். கட்டணம் இல்லைSun Direct DPO Channel Packs
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X