நிறைய எதிர்பார்ப்புகளின் மத்தியில் சாம்சங் கேலக்ஸி எஸ் 10... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை என்னென்ன ?

மூன்றும் இன்ஃபினிட்டி -ஓ டிஸ்பிளேவுடன் வெளியாக உள்ளது.

Samsung Galaxy S10 series : சாம்சங் எஸ் சீரியஸ் போன்கள் வெளியாகி இந்த வருடத்துடன் 10 வருடங்கள் நிறைவடையப் போகின்றது. ஆப்பிள் போன்ற அதிக விலை கொண்ட ப்ரீமியம் போன்களுக்கு மாற்று போன்களாக களம் இறங்கியது தான் இந்த எஸ் சீரியஸ் போன்கள்.

10வது வருட கொண்டாட்டத்தை சிறப்பிக்கவே இந்த எஸ்10 போன், இந்த மாதம் வெளியிடப்படுகிறது.

Samsung Galaxy S10 series

Samsung Galaxy S10 series

சான்பிரான்சிஸ்கோவில் அன்பேக்ட் என்ற ஈவண்ட்டில் இந்த புதிய சீரியஸை வெளியிட திட்டமிட்டிருக்கிறது சாம்சங் நிறுவனம். இந்த நிகழ்வானது பிப்ரவரி மாதம் 20ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் உலகின் முதல் போல்டபிள் போன் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பும் கிளம்பியுள்ளது.

எஸ் 10 சீரியஸில் கேலக்ஸி S10+, கேலக்ஸி S10, மற்றும் கேலக்ஸி S10 லைட் போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

கேலக்ஸி எஸ் 10 சீரியஸ் (Samsung Galaxy S10 series) சிறப்பம்சங்கள்

கேலக்ஸி எஸ் 10 போன் 6.1 இன்ச் அளவு கொண்டது. கேலக்ஸி எஸ் 10+ போனின் அளவு 6.4 ஆக இருக்கலாம். எஸ் 10 லைட் போனின் அளவு 5.8 ஆக இருக்கலாம்.

இந்த மூன்று போன்களும் பஞ்ச் ஹோல் ஃபிரண்ட் கேமராவுடன் வெளியாக உள்ளது. மூன்றும் இன்ஃபினிட்டி -ஓ டிஸ்பிளேவுடன் வெளியாக உள்ளது.

கேமராக்கள்

எஸ் 10 மற்றும் எஸ் 10+ இரண்டு போன்களும் மூன்று பின்பக்க கேமராக்களை கொண்டுள்ளது. அவற்றின் சிறப்பம்சங்கள் 12MP டெலிபோட்டோ லென்ஸ் f/2.4 அபெர்ச்சர், 12MP வைட் கேமரா லென்ஸ் f/1.5 அபெர்ச்சர் and a 16MP அல்ட்ரா வைட் சென்சார் f/2.2 அபெர்ச்சர் ஆகும்.

ஒரே நேரத்தில் நான்கு போன்களை அறிமுகம் செய்யும் மோட்டோ

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close