Advertisment

Best Fitness Apps 2022: உடல் ஆரோக்கியம் பற்றிய கவலை? உங்களுக்கு உதவும் Apps இங்கே!

Exercise energizes your mind and body in many ways, as you can see in this post on the best fitness apps for your Android phones | உடல் ஆரோக்கியம் மற்றும் ஃபிட்னஸ் -க்கு உதவும் ஆன்லைன் செயலிகள் பற்றி இங்கு காண்போம்.

author-image
WebDesk
New Update
Best Fitness Apps 2022: உடல் ஆரோக்கியம் பற்றிய கவலை? உங்களுக்கு உதவும் Apps இங்கே!

Fitness Apps 2022

Best Workout Apps | Best fitness and exercise apps: தொழில்நுட்ப வளர்ச்சியில் பல செயல்கள் இப்போது எளிதாகி விட்டது. வீட்டிலிருந்தபடியே அனைத்து வேலைகளையும் செய்கிறோம். அனைத்து துறைகளும் நவீன மையமாகி வருகிறது. காய்கறி வாங்குவது முதல் உடைகள் எடுப்பது வரை அனைத்தும் ஆன்லைன் செயலில் செய்து முடிக்கிறோம்.

Advertisment

அந்தவகையில் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் வகையில் செயலிகள் உள்ளன. அதாவது, உடற்பயிற்சி, நடைபயிற்சி, யோகா போன்றவற்றை முறைப்படுத்தி உங்களுக்கு வழங்கும். சில ஸ்மார்ட்வாட்ச்-யில் கூட இது பற்றி அறிந்திருப்பீர்கள். உடல் ரத்த உளவு, கலோரி, இதயத்துடிப்பு போன்றவற்றை அது கணக்கிடு காண்பிக்கும். அதுபோல், ஆண்ட்ராய்டு போன்களில் உள்ள ஃபிட்னஸ் மற்றும் உடற்பயிற்சி செயலிகள் குறித்து இங்கு காண்போம். இந்த செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

1.Google Fit

கூகுள் நிறுவனம் தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமாக உள்ளது. கூகுள் பல்வேறு வசதிகளை பயனர்களுக்கு கொடுக்கிறது. அதில் ஒன்று கூகுள் ஃபிட் செயலியாகும். அனைத்து ஃபிட்னஸ் தரவுகளையும் இந்த ஒரே செயலியில் பெறலாம். நீங்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு தூரம் நடந்துள்ளீர்கள், உடல் கொழுப்பின் அளவு, கலோரி, ஓட்டப்பயிற்சி செய்தால் அதன் விவரம், நடைபயிற்சி என அனைத்து தரவுகளையும் இந்த செயலியில் காணமுடியும். கூகுள் பிளே ஸ்டோரில் செயலியை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

publive-image

2.JEFIT Workout Tracker

ஜிம் செல்பவர்களுக்கு இந்த செயலி உதவியாக இருக்கும். இதில் இலவசமாக 1300 பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்களின் ஃபிட்னஸ் பிளான்களை இதில் குறிப்பிட்டு வைக்கலாம்.

3.HealthifyMe

தொடர்ந்து உடற்பயிற்சி, ஃபிட்னஸ் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த செயலி பற்றி தெரிந்திருக்கும். நிறைய பேரால் பயன்படுத்தப்படும் செயலி எனக் கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தை கவனிக்க உதவுகிறது. உடற்பயிற்சி ட்ராக்கர் வசதி, உடல் எடை குறைப்பு, தண்ணீர் அருந்துதல், தூக்கம் போன்றவற்றின் தரவுகளை அளித்து உதவியாக இருக்கிறது. ஒர்கவுட் மற்றும் யோகா பயிற்சிகள் மேற்கொள்ளவும் உதவுகிறது.

4.Daily Yoga

இது யோகா பயிற்சி செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. யோகா பயிற்சி, யோகா பயிற்சி முறை, எவ்வளவு நேரம் பயிற்சி செய்ய வேண்டும் என விவரித்து கூறப்பட்டுள்ளது. வாய்ஸ் கிளிப் வசதி இருப்பதால் யோகா செய்ய மிகவும் உதவியாக இருக்கும்.

5.Calorie counter MyfitnessPal

இந்த செயலி உங்கள் ஃபிட்னஸ்-க்கு உதவியாக இருக்கும். உடல் எடை குறைப்பதற்கான உணவு முறைகள், பயிற்சி உள்ளிட்டவற்றை இதில் தெரிந்து கொள்ளலாம். இது தொடர்பான தரவுகள் பயிற்சிகளும் வழங்கப்பட்டிருக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Healthy Life Fitness
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment