ரூ.10,000க்கு கீழ் பெஸ்ட் மொபைல் - பட்ஜெட் முக்கியம் நண்பா

GST உயர்த்தப்பட்ட பிறகு நாட்டில் ஸ்மார்ட் கைபேசிகளின் விலை மிகவும் உயர்ந்துள்ளது. சில கைபேசிகளின் விலை ரூபாய் 2,000/- க்கும் மேல் உயர்ந்துள்ளது. இருப்பினும் நல்ல எண்ணிக்கையிலான ஸ்மார்ட் கைபேசிகளை Motorola, Xiaomi, Samsung, Vivo, மற்றும் Realme போன்ற பிராண்டுகளிலிருந்து நீங்கள் ரூபாய் 10,000/- க்கும் குறைவான விலையில் வாங்க முடியும்.

ரூபாய் 10,000/- க்கும் கீழ் சிறப்பாக இயங்கும் ஸ்மார்ட் கைபேசிகளின் சிலவற்றை இங்கே பட்டியலிட்டுள்ளோம்

Moto G8 Power Lite

4GB RAM மற்றும் 64GB உட்புற சேமிப்பு வசதி (internal storage) கொண்ட Moto G8 Power Lite கைபேசியின் அடிப்படை மாடல் ரூபாய் 8,999/- லிருந்து தொடங்குகிறது. 6.5-inch IPS LCD டிஸ்ப்ளே, octa-core MediaTek Helio P35 processor உடன் வரும் இந்த வகை கைபேசியின் பின்பகுதியில் 16MP triple கேமரா setup மற்றும் 8MP முன்புற கேமராவும் உள்ளது. மேலும் இந்த வகை கைபேசிகள் 5000mAh பேட்டரியுடன் வருகிறது.

சமச்சீரற்ற நிலையில் நிலா : தூரம் மற்றும் அருகில் இருப்பவைகள் ஏன் வேறுபடுகின்றன?

Redmi 8A Dual

ரூபாய் 7,499/- என்ற விலையில் வரும் Redmi 8A Dual கைபேசியின் அடிப்படை மாடலில் 2GB RAM மற்றும் 32GB உட்புற சேமிப்பு வசதி உள்ளது. அதேசமயம் 3GB/32GB மாடல் மற்றும் 3GB/64GB மாடல் முறையே ரூபாய் 8,299/- மற்றும் ரூபாய் 8,999/- க்கு கிடைக்கிறது.


Qualcomm Snapdragon 439 processor, 6.22-inch டிஸ்ப்ளேயுடன் வரும் இந்த கைபேசியில் 13MP dual பின்புற கேமரா setup மற்றும் 8MP முன் பகுதி கேமரா மற்றும் 5000mAh பேட்டரி 18W விரைவாக சார்ஜாகும் திறனுடன் கிடைக்கிறது.

Realme Narzo 10A

Realme Narzo 10A கைபேசியின் அடிப்படை மாடல் ரூபாய் 8,999/- க்கு 3GB RAM மற்றும் 32GB ROM உடன் வருகிறது. மேலும் இந்த வகை கைபேசியில் 20:9 aspect ratio உடன் 6.5-inch டிஸ்ப்ளே, MediaTek Helio G70 processor, reverse charging ஆதரவுடன் கூடிய 5000mAh பேட்டரி, 12MP triple பின்புற கேமரா setup மற்றும் 5MP செல்பி கேமராவுடன் கிடைக்கிறது.

Vivo U10


3GB RAM மற்றும் 32GB உட்புற சேமிப்பு வசதியுடன் வரும் Vivo U10 கைபேசியின் அடிப்படை மாடலின் விலை ரூபாய் 9,990/- லிருந்து தொடங்குகிறது. 6.35-inch HD+ டிஸ்ப்ளே, 13MP triple பின்புற கேமரா setup, 8MP முன்புற கேமரா, Qualcomm Snapdragon 665 processor மற்றும் 18W விரைவாக சார்ஜாகும் வசதியுடன் கூடிய 5000mAh பேட்டரி யுடன் இந்த மாடல் கைபேசி கிடைக்கிறது.

லாக்- டவுனை குறிவைத்து அடிக்கும் ஜியோ ஃபைபர்: அடுத்த இலவச சலுகையும் வந்தாச்சு!

Samsung Galaxy M01

Samsung Galaxy M01 மாடல் கைபேசி ரூபாய் 8,999/- விலையில் 3GB RAM மற்றும் 32GB உட்புற சேமிப்பு (internal storage) வசதியுடன் வருகிறது. பின்புறத்தில் 13MP dual-கேமரா setup மற்றும் 5MP முன்புற கேமரா, Qualcomm Snapdragon 439 processor, 5.7-inch டிஸ்ப்ளே, 4000mAh பேட்டரி யுடன் வரும் இந்த கைபேசி Android 10 based on One UI 2.0 யில் இயங்குகிறது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close