ரூ. 100க்கு சிறந்த ப்ரீபெய்ட் பிளான்கள் வழங்கும் ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள்

இலவச எஸ்.எம்.எஸ்கள், வோடஃபோன் ப்ளே ஆப் போன்ற வசதிகள் இந்த பிளானில் அடங்காது.

Best prepaid recharge plans : இந்தியாவில் தலைசிறந்த தொலைத் தொடர்பு சேவைகளை வழங்கி வரும் நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன், மற்றும் ஜியோ வாடிக்கையாளர்களை கவர புதுப்புது திட்டங்களுடன் வருவது வாடிக்கையாகிவிட்டது. தற்போது 100 ரூபாய்க்கும் குறைவான ப்ரீபெய்ட் சலுகைகளை தங்களின் வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறது இந்நிறுவனங்கள்.

Best prepaid recharge plans : ரிலையன்ஸ் ஜியோ

28 நாட்களுக்கான இந்த பிளானின் விலை 98 ரூபாஅய் ஆகும். 2ஜிபி 4ஜி டேட்டாவை இந்த ப்ளான் மூலம் வாடிக்கையாளர்கள் பெறலாம். ஆனால் இந்த சலுகையைப் பெற ஜியோ ப்ரைம் மெம்பராக இருக்க வேண்டும். இல்லையென்றால் அதற்கு ஒரு 99 ரூபாய் மற்றும் இந்த சலுகை 98 ரூபாய் என 197 ரூபாய் கட்டி இந்த பிளானை பெறலாம். ஜியோ டிவி, ஜியோ மணி போன்ற செயலிகளை நீங்கள் இலவசமாக பெறலாம்.

Best prepaid recharge plans : வோடஃபோன் 95 ரூபாய் திட்டம்

இதன் வேலிட்டி 28 நாட்கள் மட்டுமே

500 எம்.பி 4ஜி மற்றும் 3ஜி டேட்டா

போன் கால்கள் ஒரு நிமிடத்திற்கு 30 பைசாவாகும்

இலவச எஸ்.எம்.எஸ்கள், வோடஃபோன் ப்ளே ஆப் போன்ற வசதிகள் இந்த பிளானில் அடங்காது.

ஏர்டெல் 95 ரூபாய் திட்டம்

இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்

ஒரு நிமிட காலுக்கு 30 பைசா மற்றும் ரூபாய் 95-க்கான டாக் டைம்

500 எம்.பி 3ஜி மற்றும் 4ஜி டேட்டா போன்ற வசதிகளை இந்த திட்டம் அளிக்கிறது.

மேலும் படிக்க : வாட்ஸ்ஆப் ட்ரிக்ஸ்… ஸ்டேட்டஸ் பார்க்க புதிய வசதி

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close