ஸ்மார்ட்போன்களை வாங்க இது தான் நல்ல நேரம்… அமேசான், ஃப்ளிப்கார்ட்டின் அமேஸிங் ஆஃபர்கள்

எஸ்.பி.ஐ. கார்ட்களில் ஸ்மார்ட்போன்கள் வாங்கினால் கூடுதல் தள்ளுபடி உண்டு.

By: October 24, 2019, 5:20:26 PM

Best smartphones for Diwali under Rs 25,000 : தீபாவளிக்கு ஸ்மார்ட்போன்களை வாங்க விரும்புகிறீங்கன்னா இந்த நியூஸ் உங்களுக்கு தான். அதுவும் ரூ. 25000 தான் உங்களின் பட்ஜெட் என்றால் நீங்கள் நிச்சயம் படிக்க வேண்டிய நியூஸ் இது தான். தீபாவளிக்காக அமேசானும் ஃப்ளிப்கார்ட்டும் மாறி மாறி செம்மையான ஆஃப்ர்களை விடுத்து வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்கின்றனர். தற்போது ஸ்மார்ட்போன்களுக்கு எந்த வகையான ஆஃபர்களை வெளியிட்டுள்ளனர் இந்த ஆன்லைன் போர்ட்டல்கள் என்பதை இங்கே பார்க்கலாம்.

Best phones for Diwali under Rs 25,000 : ரெட்மி கே20 ப்ரோ

ரெட்மி கே20 ஸ்மார்ட்போன் சியோமியின் ப்ரீமியம் ஸ்மார்ட்போன்கள் என்றே வழங்கப்பட்டன. இதனுடைய ஆரம்ப விலை ரூ. 27,999 ஆகும். ஆனால் தற்போதைய தீபாவளி தள்ளுபடியில் இந்த ஸ்மார்ட்போனை ஃப்ளிப்கார்ட் ரூ. 24,999க்கு விற்பனை செய்து வருகிறது. எஸ்.பி.ஐ கார்ட்கள் பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் உங்களுக்கு கூடுதலாக ரூ. 1750 தள்ளுபடியாகும்.

ஔரா பேக் டிசைனுடன் வெளியான இந்த ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ் 128 ஜிபி ஆகும். 4000mAh பேட்டரியை கொண்டுள்ளது. 48MP + 8MP + 13 MP என மூன்று ரியர் கேமராக்களை கொண்டுள்ளது. செல்ஃபி கேமரா 20MP செயல்திறனை கொண்டுள்ளது.

Honor 20

ஹானர் 20-ன் ஆரம்பவிலையே ரூ. 32,999 ஆகும். ஃப்ளிப்கார்ட் நிறுவனம் தற்போது அதிரடியாக ரூ. 8000 வரையில் தள்ளுபடி செய்துள்ளது. எஸ்.பி.ஐ. கார்ட்கள் மூலமாக இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் மேலும் விலை குறைக்கப்பட்டு இறுதியாக ரூ. 23,249க்கு விற்பனை செய்யப்படும். 48MP+16MP+2MP+2MP என நான்கு கேமரா செட்-அப்களை கொண்டுள்ளது. செல்ஃபி கேமரா செயல்திறன் 32 எம்.பி. ஆகும்.

மேலும் படிக்க : ஸ்மார்ட் டிவிகளுக்கு இப்படி ஒரு தள்ளுபடியா? அமேசான், ஃப்ளிப்கார்ட்டின் அதிரடி தீபாவளி சேல்!

Poco F1

இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகமானது. இதன் ஆரம்ப விலை ரூ. 20,999. தற்போது ரூ. 14,999க்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. எச்.பி.ஐ டெபிட் மற்றும் க்ரெடிட் கார்ட்டுகளை பயன்படுத்தினால் மேலும் இதன் விலை குறையும். ஆர்மோர்ட் எடிசன் போன்கள் தற்போது ரூ. 18,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. 12MP+5MP செயற்திறன் கொண்ட இரட்டை பின்பக்க கேமராவும், 20MP செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

Samsung Galaxy A50s

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ரோமை கொண்ட இந்த ஸ்மார்ட்போனை சாம்சங் நிறுவனம் ரூ. 22,999க்கு அறிமுகம் செய்து வைத்தது. தற்போது இதன் விலை ரூ. 20,999 ஆகும். அமேசான் பே பேலன்ஸ் மூலமாக இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் கூடுதலாக தள்ளுபடிகள் கிடைக்கும். 48MP+8MP+5MP என மூன்று பின்பக்க கேமராக்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். இதன் பேட்டரி ஸ்டோரேஜ் 4,000mAh ஆகும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Best smartphones for diwali under rs 25000 buy redmi k20 pro honor 20 poco f1 galaxy a50s

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X