ரூ.599-க்கு பி.எஸ்.என்.எல் வழங்கும் அதிரடி ஆஃபர்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

இந்த ஃப்ளான்களில் நாள் ஒன்றிற்கு 2ஜிபி டேட்டா என 365 நாட்களுக்கும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

BSNL 599 Prepaid Plan for 180 days validity  : பி.எஸ்.என்.எல் தற்போது தங்களின் வாடிக்கையாளர்களுக்காக மிக சூப்பரான ஆஃபர் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. 599 ரூபாய் ப்ரீபெய்ட் ப்ளானில் 180 நாட்களுக்கு இலவச உள்ளூர் மற்றும் வெளியூர் கால்கள் பேசிக் கொள்ளலாம் (மும்பை மற்றும் டெல்லி வட்டாரம் நீங்கலாக)

BSNL 599 Prepaid Plan for 180 days validity

தற்போதைக்கு இந்த ஆஃபர்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் மட்டுமே செயல்படும்.  பி.எஸ்.என்.எல் ரூ.349க்கு மற்றொருமொரு ஆஃபரை வழங்குகிறது. இதன் வேலிடிட்டி 64 நாட்களாகும்.

இதற்கு முன்பு 54 நாட்களாக இதன் வேலிடிட்டி இருந்தது. நாள் ஒன்றிற்கு 3.2ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

தற்போது ரூ.549, ரூ.561, ரூ.2,798, ரூ.3,998, மற்றும் ரூ.4,498 போன்ற ஆஃபர்களை வழங்குகிறது. இந்த ஃப்ளான்களில் நாள் ஒன்றிற்கு 2ஜிபி டேட்டா என 365 நாட்களுக்கும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஜியோ நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய ஆஃபர்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருவதால், தங்களுடைய வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ள புதிய புதிய ஆஃபர்களை மற்ற நிறுவனங்கள் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : உங்கள் ஸ்மார்ட்போன் உங்களை பின் தொடருவதிற்கு அனுமதிக்காதீர்கள்

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close