/tamil-ie/media/media_files/uploads/2019/03/bsnl-agencies.jpg)
BSNL Rs 1699 annual prepaid plan
BSNL Free Broadband Service : பி.எஸ்.என்.எல் சேவையில் லேண்ட் லைன் பெற்றிருக்கும் வாடிக்கையாளர்கள் தற்போது இலவச ப்ராட்பேண்ட் சேவையைப் பெறலாம். இந்த சேவையைப் பெற நீங்கள் வாடிக்கையாளர்கள் உதவி எண்ணான டோல்ஃபிரி எண்ணிற்கு அழைப்பு விடுத்தால் மட்டும் போதுமானது.
BSNL Free Broadband Service
ஜியோவின் ப்ராட்பேண்ட் சேவைக்கு நிகராக இந்த சேவையை தற்போது பி.எஸ்.என்.எல் அறிவித்துள்ளது. 18003451504 என்ற எண்ணிற்கு நீங்கள் கால் செய்து ரெஜிஸ்டர் செய்தால், உங்கள் இல்லதிற்கு ப்ராட்பேண்ட் கனெக்சனை இன்ஸ்டால் செய்துவிடுவார்கள்.
புதிதாக பி.எஸ்.என்.எல் சேவையை பெற விரும்புபவர்கள் இன்ஸ்டாலேசனிற்கான கட்டணத்தை வழங்க வேண்டும். ஆனால் ஏற்கனவே லேண்ட்லைன் சேவை வைத்திருப்பவர்களுக்கு அந்த கட்டணமும் முழுதாக ரத்து செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
100MBPS வேகத்தில் வாடிக்கையாளர்கள் 5ஜி டேட்டாவை பெற்றிட இயலும். ஆனால் 5ஜிபி வரையில் தான் பயன்படுத்த இயலும். அதற்கு மேல் பயன்படுத்தப்படும் டேட்டாவிற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
மார்ச் 31ம் தேதிக்குள் இந்த சலுகை முடிவடைகிறது. பி.எஸ்.என்.எல் ஃபைபர் சர்வீஸ் பெரும் நபர்கள் வருடத்திற்கு அமேசான் ப்ரைமை இலவசமாக பெற்றிடலாம்.
மேலும் படிக்க : ஏர்டெல் வழங்கும் நான்கு அசத்தல் டேட்டா ஆஃபர்கள்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.