BSNL launched 4G services in Madurai : இந்தியாவில் இருக்கும் அனைத்து தனியார் நெட்வொர்க் நிறுவனங்களும் 4ஜி சேவைகளுக்கு இணைய சேவையை வழங்க, அரசு நெட்வொர்க் நிறுவனமான பி.எஸ்.என்.எல் தற்போது தங்களின் 4ஜி சேவையை துவங்கியுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் கோவை, சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கு 4ஜி சேவையை வழங்கி வரும் பி.எஸ்.என்.எல் நிறுவனம் தற்போது மதுரை மாவட்டத்திலும் பி.எஸ்.என்.எல் 4ஜி சேவை துவங்கப்பட்டுள்ளது.
BSNL launched 4G services in Madurai
மதுரை மண்டலத்துக்கு உட்பட்ட 139 பேஸ் டவர்கள் வழியாக 4ஜி சேவை மக்களுக்கு வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார் மதுரை பி.எஸ்.என்.எல் பொது மேலாளர் ராஜம். மதுரையில் இருக்கும் பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் தங்களின் 3ஜி சிம்மை மாற்றி 4ஜி சிம்மை பெற்றால் மட்டுமே இந்த சேவைகளை தொடர்ந்து பெற முடியும். மதுரை மண்டலத்தில் வரும் வருமான வகை மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 2ஜி வாடிக்கையாளர் எந்த வகையான பிரச்சனையும் இன்றி தங்களின் பயன்பாட்டை தொடர இயலும்.
3ஜி சேவையை பயன்படுத்தும் 68 ஆயிரம் வாடிக்கையாளர்களில் 38 ஆயிரம் நபர்களே 4ஜி சிம்களுக்கு அப்டேட் ஆகியுள்ளனர். அவர்கள் நெட்வொர்க் ஃப்ளக்சுவேசனை எதிர் கொள்வதை தடுக்க முன்பே எஸ்.எம்.எஸ்கள் மற்றும் கால்கள் மூலமாக தகவல்கள் அளிக்கப்பட்டுவிட்டது. 4ஜி சேவைகளுக்கான டேரிஃபில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் மதுரை மாவட்டத்திற்கு வெளியே இருக்கும் வாடிக்கையாளர்கள் இந்த சேவையை மதுரையில் பெற வேண்டும் என்றால் நிச்சயமாக 4ஜி சிம்களை பெற வேண்டும்.
தல்லாகுளம், கிழக்கு மாசி வீதி, வடக்கு சித்திரை வீதி, எல்லிஸ் நகர் போன்ற இடங்களில் அமைந்திருக்கும் பி.எஸ்.என்.எல். சேவை மையங்களில் 4ஜி சிம்கார்ட்களை பெற்றுக் கொள்ளலாம். 0452-255-0000 பி.எஸ்.என்.எல் சேவைகள் தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின் இந்த எண்ணுக்கு அழைத்து பேசிக்கொள்ளலாம். இதன் வேகம் 3.5 MBPS தரவிறக்கத்தின் போதும், பதிவேற்றத்தின் போது வேகம் 10 முதல் 12 MBPS ஆக இருக்கும்.
மேலும் படிக்க : ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டா… அசத்தல் ஆஃபர்களை வழங்கும் பி.எஸ்.என்.எல்