BSNL launches Rs 97, Rs 365 prepaid plans with 2GB data : பி.எஸ்.என்.எல் நிறுவனம் தற்போது இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. ரூ. 97, ரூ. 365 திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டதோடு, ரூ. 399 மற்றும் ரூ. 1,999 ப்ரீபெய்ட் ப்ளான்களில் சில மாற்றங்களையும் கொண்டு வந்துள்ளது.
ரூ. 365 ப்ரிபெய்ட் ப்ளான்
தமிழ்நாட்டில் இருக்கும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியான இந்த அறிவிப்பில் ரூ. 365-க்கான ப்ரீபெய்ட் ப்ளான் மூலமாக வாடிக்கையாளர்கள் 2ஜிபி டேட்டாவை தினந்தோறும் பெற இயலும் என்றும், 100 இலவச எஸ்.எம்.எஸ்களையும் அனுப்ப இயலும் என்றூம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லி மற்றும் மும்பை உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் அன்லிமிட்டட் கால்கள் செய்து கொள்ள இயலும். இதன் வேலிடிட்டி 60 நாட்களாகும்.
ரூ. 97 ப்ரிபெய்ட் ப்ளான்
இதன் வேலிடிட்டி 18 நாட்களாகும். நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டாவையும் 100 இலவச எஸ்.எம்.எஸ்களையும் அனுப்ப இயலும். தமிழகத்தின் அனைத்து வட்டங்களிலும் இந்த ப்ளான் செயல்படுகிறதா என்பது குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
மாற்றம் செய்யப்பட்ட ப்ளான்கள்
இந்த இரண்டு திட்டங்கள் மட்டுமில்லாமல் ரூ. 399 மற்றும் ரூ. 1,999 ப்ரீபெய்ட் திட்டங்களில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது பி.எஸ்.என்.எல் நிறுவனம். ரூ. 399க்கான வேலிடிட்டி நாட்களை 74 நாட்களில் இருந்து 80 நாட்களாக உயர்த்தி அறிவித்துள்ளது. நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டாவை நீங்கள் பெற்றுக் கொள்ள இயலும். ரூ. 1999 திட்டம் இதற்கு முன்பு 2ஜிபி டேட்டாவை வழங்கி வந்தது. ஆனால் தற்போது 3ஜிபி டேட்டாவை வழங்கி மாற்றம் கொண்டு வந்துள்ளது. 365 நாட்கள் இதன் வேலிடிட்டி ஆகும்.
மேலும் படிக்க : நவம்பர் 20-ல் வெளியாகிறது ரியல்மியின் இரண்டு ஸ்மார்ட்போன்கள்!