Budget Smartphone Honor Play 8 specifications, features, camera : சீனாவில் எண்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது ஹானர். ஹானர் ப்ளே 8 என்று அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.6000க்கும் குறைவாகவே இருக்கும். சீனா யுவான் மதிப்பில் 599 என்பது இதன் விலையாகும்.
விமால் மற்றும் சீனாவில் இருக்கும் இ- ரீட்டெய்லர்களில் இந்த ஸ்மார்ட்போனை வாடிக்கையாளர்கள் வாங்கிக் கொள்ளலாம். ஹானர் ப்ளே 8ஏ மற்றும் ப்ளே 8சி போன்று இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் மட்டுமே விற்பனையாகுமா அல்லது இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுமா என்பது தொடர்பாக அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை.
Budget Smartphone Honor Play 8 specifications, features, camera spec
இந்த ஸ்மார்ட்போன் 5.17 இன்ச் அளவு உள்ளது
எச்.டி. + ஐ.பி.எஸ் எல்.சி.டி டிஸ்பிளேவுடன் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போனின் ரெசலியூசன் 1520×720 ஆகும்.
க்வாட்கோர் மீடியா-டெக் ஹெலியோ ஏ22 ப்ரோசசர் மூலம் இந்த ஸ்மார்ட்போன் செயல்படுகிறது.
2ஜிபி ரேம் / 32ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜூடன் இந்த போன் வெளியாகிறது. இந்த ஸ்டோரேஜை 512 ஜிபி வரை மெமரி கார்ட் மூலமாக விரிவுபடுத்திக் கொள்ளலாம்.
ஆண்ட்ராய்ட் 9.0 பை இயங்கு தளத்தில் இயங்கும் இந்த போனின் பேட்டரி செயல் திறன் 3,020mAh ஆகும்.
கேமரா 13 எம்.பி. பிரைமரி சென்சாரை கொண்டுள்ளது. செல்ஃபி கேமரா 5 எம்.பி. ஆகும்.
மேலும் படிக்க : ஒன்ப்ளஸ் 7 ப்ரோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு!