ரூ.7000க்குள் ஸ்மார்ட்போன் வாங்கனுமா? இந்த லிஸ்ட்ட கொஞ்சம் செக் பண்ணுங்க!

டாட் நாட்ச் டிசைனுடன் இருக்கும்ம் இந்த கேமராவில் 13 எம்.பி. ரியர் கேமராவும், 5 எம்.பி. செல்ஃபி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

Budget Smartphones under Rs 7000 : இந்திய மார்க்கெட், பட்ஜெட் போன்களுக்கு பெரும் வரவேற்பு உள்ளது. ரூ. 7000க்கு ஸ்மார்ட்போன்கள் வாங்க வேண்டுமா? ரூ. 7000க்கு கீழே இருக்கும் ஸ்மார்ட்போன்கள் ஒரு பார்வை

ரெட்மி 6ஏ (Redmi 7A) : விலை ரூ. 6,465

இந்த ஸ்மார்ட்போன் 13 எம்.பி. ரியர் கேமராவையும், 5 எம்.பி. செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது.

இதன் பேட்டரி சேமிப்புத்திறன் 3,000mAh ஆகும். 5.45 இன்ச் எச்.டி. டிஸ்பிளே கொண்டுள்ளது.

2ஜிபி ரேமும் 16ஜிபி/32ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டுகளையும் கொண்டுள்ளது.

இதன் விலை : ரூ. 6,465

ஆண்ட்ராய்ட் ஓரியோ 8.1 க்வாட் கோர் ப்ரோசசரை கொண்டுள்ளது.

மேலும் படிக்க  : ரூ. 6500-க்கு வெளியாக இருக்கும் சியோமி ரெட்மி கோ ஸ்மார்ட்போன்… சிறப்பம்சங்கள் என்னென்ன?

ரியல்மீ சி2 (Realme C2) –  விலை ரூ. 5,999

இந்த எண்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 5,999 ஆகும்.

13 எம்.பி + 2 எம்.பி ரியர் கேமராவை கொண்டுள்ளது. செல்ஃபி கேமராவின் செயல்திறன் 5 எம்.பி. ஆகும்.

6.1 எச்.டி டிஸ்பிளேவையும், 4000mAh பேட்டரியையும் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்ட் பை இயங்குதளத்தில் இயங்குகிறது.

நோக்கியா 2.2 (Nokia 2.2) – விலை ரூ. 6,999

5.71 இன்ச் எச்.டி. திரையை கொண்டுள்ளாது.

டாட் நாட்ச் டிசைனுடன் இருக்கும்ம் இந்த கேமராவில் 13 எம்.பி. ரியர் கேமராவும், 5 எம்.பி. செல்ஃபி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

3,000mAh பேட்டரி செயல்திறனை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்

ஸ்டோரேஜ் ஆப்சன் : 2GB/3GB RAM மற்றும் 16GB/32GB ஆகும்.

ரெட்மி 7ஏ (Redmi 7A) – விலை 5,799

5.45 இன்ச் அளவு கொண்ட ஐ.பி.எஸ் எல்.சி.டி எச்.டி டிஸ்பிளேவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளது

1440×720 பிக்சல்கள் ரெசலியூசன் கொண்டவை இந்த ஸ்மார்ட்போன்

குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 439 ப்ரோசசர் கொண்டுள்ளது இந்த போன்.

ஆட்ரெனோ 505 கிராஃபிக்ஸ் ப்ரோசசர் யூனிடில் இயங்குகிறது இந்த போன்.

2ஜிபி/3ஜிபி மற்றும் 16ஜிபி/32ஜிபி இண்டெர்நெல் வேரியண்ட்டுகளில் இந்த போன்கள் கிடைக்கின்றன.

ஆண்ட்ராய்ட் 9.0 பை இயங்கு தளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் MIUI 10 ஸ்கின் இயங்கு தளத்தில் இது இயங்குகிறது.

மேலும் படிக்க : சியோமி ரெட்மி 7A : ரூ. 6000 விலையில் ஸ்மார்ட்போன் வாங்கனுமா? அப்போ இந்த போன் தான் சரியான தேர்வு…

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close