Budget Smartphones Xiaomi Redmi 7A at Rs.6000 : சியோமியின் ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீனாவில் நன்றாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் என்னவென்றால் அதன் விலை தான். 599 யுவானுக்கு (ரூ. 6000) இந்த ஸ்மார்ட்போன் விற்பனையாகி வருகிறது. தற்போது அதே போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது சியோமி இந்தியா. எப்போது இந்த போன்கள் அறிமுகமாகின்றன என்பதை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
மிக சமீபத்தில் தான் எல்.ஜி. நிறுவனம் ட்புள்யூ (LG W Series) சீரியஸில் புதிய போன்களை இந்தியாவில் வெளியிட்டது. W10, W30, W30 Pro போன்கள் முழுக்க முழுக்க பட்ஜெட் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக வெளியிடப்பட்டது. அதன் ஆரம்ப விலை ரூ. 8,999 ஆகும். ஆனால் அதற்கு போட்டியாக அதனைவிட குறைவான விலையில் புதிய போன்களை சியோமி களம் இறக்குகிறது.
மேலும் படிக்க :ரூ. 8999-ல் இருந்து ஆரம்பமாகும் எல்.ஜி.யின். லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்கள்!
Budget Smartphones Xiaomi Redmi 7A சிறப்பம்சங்கள்
5.45 இன்ச் அளவு கொண்ட ஐ.பி.எஸ் எல்.சி.டி எச்.டி டிஸ்பிளேவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளது
1440×720 பிக்சல்கள் ரெசலியூசன் கொண்டவை இந்த ஸ்மார்ட்போன்
குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 439 ப்ரோசசர் கொண்டுள்ளது இந்த போன்.
ஆட்ரெனோ 505 கிராஃபிக்ஸ் ப்ரோசசர் யூனிடில் இயங்குகிறது இந்த போன்.
2ஜிபி/3ஜிபி மற்றும் 16ஜிபி/32ஜிபி இண்டெர்நெல் வேரியண்ட்டுகளில் இந்த போன்கள் கிடைக்கின்றன.
ஆண்ட்ராய்ட் 9.0 பை இயங்கு தளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் MIUI 10 ஸ்கின் இயங்கு தளத்தில் இது இயங்குகிறது.
4,000mAh பேட்டரி சேமிப்புத்திறன் கொண்டவை இந்த போன்கள். இதனை 10W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தின் மூலம் வேகமாக சார்ஜ் செய்து கொள்ளலாம்.
13 எம்.பி. பின்பக்க கேமராவையும், 5 எம்.பி. செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.