Budget Smartphones LG W10, W30, W30 Pro Sales, Availability, Price
Budget Smartphones LG W10, W30, W30 Pro Sales, Availability, Price : இந்தியாவில் மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது எல்.ஜி. நிறுவனம். W10, W30 மற்றும் W30 Pro என்ற இந்த மூன்று போன்கள் அமேசான் இணையத்தில் விற்பனைக்கு வைக்கப்படும். இந்த மூன்று போன்களும் இந்தியாவின் பட்ஜெட் வாடிக்கையாளர்களை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டது என்று எல்.ஜி. தரப்பு கூறுகிறது.
Budget Smartphones LG W10, W30, W30 Pro Sales, Availability, Price
LG-யின் W10 ஸ்மார்ட்போன் விலை ரூ.8,999 ஆகும். W30 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 9,999 ஆகும். இந்த இரண்டு போன்களும் ஜூலை மூன்றாம் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது. ஆனால் W30 Pro ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை எல்.ஜி. நிறுவனம்.
6.26 இன்ச் எச்.டி திரை மற்றும் ஃபுல்விஷன் டிஸ்பிளே கொண்டுள்ளது. இதன் அஸ்பெக்ட் ரேசியோ 19.9 ஆகும். மீடியாடெக் நிறுவனத்தின் ஹேலியோ பி22 ப்ரோசசர் பயன்படுத்தப்பட்டுளது. ஆண்ட்ராய்ட் 9 பை இயங்குதளத்தில் இயங்கும் இந்த போனின் ஸ்டோரேஜ் 3GB RAM/32GB ROM ஆகும். 12MP+13MP+2MP செயல்திறனைக் கொண்ட மூன்று பின்பக்க கேமராக்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. செல்ஃபி கேமராவின் செயல்திறன் 16 MP ஆகும். தண்டர் ப்ளூ, ப்ளாட்டினம் க்ரே, அரோரா கிரீன் போன்ற மூன்று நிறங்களில் இந்த போன் கிடைக்கப்பெறுகிறது. 4,000mAh சேமிப்புத்திறன் கொண்ட பேட்டரியை கொண்டுள்ளது.