ஆட்டோ, டாக்ஸியில் அடிக்கடி தனியாக பயணம் செய்பவர்களா நீங்கள்? உங்களின் பாதுகாப்புக்காக கூகுள் மேப்பின் புதிய அப்டேட்…

உடனே உங்களின் போன் உங்களுக்கு அலெர்ட்டினை தர துவங்கும். உங்கள் குடும்பத்தினருக்கும் உங்கள் இடம் குறித்த லைவ் அப்டேட் கிடைக்கும். 

By: Updated: June 28, 2019, 10:37:41 AM

Google Maps Stay Safer feature : இன்றைய காலகட்டத்தில் வேலை சூழல் காரணமாக பல்வேறு இடங்களுக்கு தனியாக ஆட்டோ அல்லது கால் டாக்ஸியில் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆனால் அனைத்து பயணங்களும் பாதுகாப்பாக அமைந்துவிடுவதில்லை. குறிப்பாக பெண்களுக்கும், கையில் அதிகமாக பணம் அல்லது நகை வைத்திருப்பவர்களுக்கும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஆபத்தான சூழல் வரலாம்.

ஒருவேளை தான் செல்ல வேண்டிய இடத்திற்கு மாறான ஒரு வழியில் வண்டி சென்று கொண்டிருக்கிறது என்றால் உடனே உங்களுக்கும், உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அலர்ட் தரும் வகையில் ஒரு முக்கியமான அப்டேட்டினை வழங்கியுள்ளது கூகுள் மேப்ஸ். Google Maps Stay Safer feature எனப்படும் இந்த அப்டேட் மூலம், நீங்கள் பயணிக்கும் வண்டி அரை கிலோமீட்டர் தொலைவு வேறு வழியில் சென்றாலும் கூட உடனே உங்களுக்கு அலெர்ட் கொடுத்துவிடும்.

Google Maps Stay Safer feature : இதனை எப்படி ஆக்டிவேட் செய்வது?

நீங்கள் உங்கள் பயணத்தை ஆரம்பிக்கும் போதே, நீங்கள் சேர வேண்டிய இடத்தினை டைப் செய்து சர்சில் வைத்திருங்கள். அதன் பின்னர் உங்களுக்கு ஸ்டே ஸேஃபர் (Stay Safer)மற்றும் கெட் – ஆஃப் ரூட் அலர்ட்ஸ் (Get off-route alerts) ஆப்சன்கள் காட்டும். அதனை நீங்கள் க்ளிக் செய்ய வேண்டும்.

கூகுள் மேப்பில் காட்டப்படும் வழியைவிட்டு அரை கிலோமீட்டருக்கு அதிகமாக மாற்று வழியில் சென்றால் உடனே உங்களின் போன் உங்களுக்கு அலெர்ட்டினை தர துவங்கும். உங்கள் குடும்பத்தினருக்கும் உங்கள் இடம் குறித்த லைவ் அப்டேட் கிடைக்கும்.  அதன் மூலம்  நீங்கள் தற்போது எங்கே பயணிக்கின்றீர்கள் என்பதை உடனே உங்களின் குடும்பத்தினர் அறியத் துவங்கிவிடுவர்.

சமீபமாக ஸ்பீடோமீட்டர் அப்டேட்டை பயனாளிகளுக்கு வழங்கியது கூகுள் மேப். மேலும் நாம் செல்லும் வழியில் இயற்கை பேரிடர் வந்தால் அதில் இருந்து நம்மை காத்துக் கொள்வதற்கான அப்டேட்டினையும் நேவிகேசன் தற்போது பயனாளிகளுக்கு அளித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : ரூ. 8999-ல் இருந்து ஆரம்பமாகும் எல்.ஜி.யின். லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்கள்!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Google maps stay safer feature is now in india here is what it will do

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X