பட்ஜெட் ரூ. 25,000 : டாப் 5 கேமரா போன்கள்...

ரூ. 25,000 க்குள் நல்ல கேமரா போன் வாங்க விரும்புகிறீர்கள் என்றால், இது தான் உங்கள் சாய்ஸ்...

இந்த தீபாவளிக்கு கிடைக்கும் போனஸ் வைத்து நல்ல கேமரா போன் வாங்க விரும்புகிறீர்கள் என்றால், உங்கள் சாய்ஸ் இது தான்.  Camera phones for Deepavali 2018 என்ற சிரீயஸ்ஸில் சிறப்பான கேமரா அம்சங்களை கொண்டிருக்கும் ஐந்து போன்களின் பட்டியல் இதோ !

Camera phones for Deepavali : நோக்கியா 7 ப்ளஸ்

நோக்கியா 7 ப்ளஸ் போன் மிட்ரேஞ்ச் போன்களாகும். இதன் பின்பக்கதில் பொருத்தப்பட்டிருக்கும் இரட்டைக் கேமராக்கள் கார்ல் செய்ஸ் ( Carl Zeiss ) கேமராக்கள் ஆகும். பல்வேறு ஒளிசூழலுக்கு ஏற்றவாறும் சிறப்பான போட்டோக்களை எடுக்க இயலும்.

முதன்மை கேமரா f/1.75 aperture திறன் கொண்டுள்ளது. லோ லைட் போட்டோக்களுக்கு மிகவும் ஏற்ற கேமராவாகும்.  இரண்டாவது கேமரா 13MP telephoto லென்ஸ்களை கொண்டிருக்கிறது.

Camera phones for Deepavali 2018

நோக்கியா 7 ப்ளஸ் ஸ்மார்ட்போன்

ப்ரோ அல்லது மேனுவல் மோட் செட்டிங்குகளுடன் வெளிவரும் இந்த போனில் ஐ.எஸ்.ஓ மற்றும் எக்ஸ்போசர் அனைத்தையும் நாமே மாற்றிக் கொள்ள இயலும்.

விலை : ரூ. 22,900

Camera phones for Deepavali 2018 :  Xiaomi Mi A2

சியோமி மை 2 12 எம்.பி மற்றும் 20 எம்.பி என இரண்டு பின்பக்க கேமராக்களை கொண்டிருக்கும் இந்த போன் நோக்கியா 7 ப்ளஸ் போலவே பல்வேறு ஒளிச் சூழலுக்கும் ஏற்றவாரு புகைப்படங்கள் எடுக்க உதவும்.

இதிலும் மேனுவல் மோட் மூலமாக ஐ.எஸ்.ஓ, ஷட்டர் ஸ்பீட், மற்றும் ஃபோகஸ் ஆகியவற்றை மாற்ற இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.  128 இண்டர்நெல் ஸ்டோரேஜ் கொண்டுள்ள போனின் விலை ரூ. 17, 999 ஆகும். இந்த ஸ்மார்ட் போன் பற்றிய முழுமையான தகவல்களைப் படிக்க

Camera phones for Deepavali 2018 : ரியல்மீ 2 ப்ரோ

இந்த போன் 16 எம்.பி மற்றும் 12 எம்.பி செயல் திறன் கொண்ட இரட்டை பின்பக்க கேமராக்களுடன் வெளிவருகிறது. இண்டோர் மற்றும் லோ லைட்டிங்கில் போட்டோ எடுக்க மிகவும் சரியான போனாக இது இருக்கும். காண்ட்ராஸ்ட் மற்றும் ஷேடோ போன்ற செட்டிங்குகளை வைத்து மிகவும் சிறப்பான புகைப்படங்களை எடுக்க இயலும்.  8 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜுடன் வெளியாகும் இந்த போனின் விலை ரூ. 17,900.

மேலும் படிக்க : ரூபாய் 15,000க்கு ஸ்மார்ட்போன்கள் வாங்க வேண்டுமா ?

Camera phones for Deepavali 2018 : நோக்கியா 6.1 ( 2018)

நோக்கியா 7 ப்ளஸ் போனைப் போலவே கார்ஸ் செய்ஸ் கேமராக்களுடன் வருகிறாஹ்டு. மற்ற போன்களைப் போல் இரட்டைப் பின்பக்க கேமரா இல்லாமல் 16 எம்.பியுடன் கூடிய ஒற்றை கேமராவுடன் வெளியாகிறது இந்த போன்.

4K வீடியோக்களை எடுக்கும் அளவிற்கு மிகவும் சிறப்பான கேமராவினை கொண்டிருக்கும் இந்த போனின் விலை ரூ.16,499 (4GB RAM) ஆகும்.

Camera phones for Deepavali 2018 :  மோட்டோ X4

12 எம்.பி மற்றும் 8 எம்.பி பின்பக்க கேமராக்களுடன் வலம் வரும் இந்த போன் சிறந்த லேண்ஸ்கேப் போட்டோக்களை எடுக்க உதவும். 4ஜிபி RAM திறனுடன் வெளியாகும் இந்த போனின் விலை 17,999 ரூபாய் ஆகும். லோ – லைட் புகைப்படங்கள் எடுக்க மிகவும் ஏற்றது.

Camera phones for Deepavali 2018

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close