1. Chandrayaan 2 Interesting facts : 1000 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது சந்திரயான் 2. ஆர்பிட்டர், லேண்டர், மற்றும் ரோவர் என்று மூன்று முக்கிய பிரிவுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள சந்திரயான் 2 நாளை காலை 02.51 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது.
Chandrayaan 2 Interesting facts
2. உலகின் வேறெந்த விண்வெளி ஆராய்ச்சி மையமும் செய்திடாத மகத்தான ஒரு நிகழ்வை சந்திரயான் 2 நிறைவேற்ற உள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்படும் முதல் செயற்கைகோள் இதுவாகும்.
3. இதன் லேண்டர் விக்ரம் சாராய் அவர்களின் நினைவாக விக்ரம் என்று அழைக்கப்படுகிறது. ரோவருக்கு அறிவின் சமஸ்கிருத வார்த்தையான ப்ரக்யான் வைக்கப்பட்டுள்ளது. சந்திரயான் 1 நிலவின் சுற்றுவட்டாரப் பாதையில் செல்வதற்காக உருவாக்கப்பட்டது. இந்த செயற்கைகோள் நிலவில் இறங்கி ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது.
பாகுபலி என்று பெயரிடப்பட்டிருக்கும் ராக்கெட்
4. சந்திரயான் 2-ஐ விண்ணுக்கு எடுத்துச் செல்லும் மாபெரும் பொறுப்பினை கையில் எடுத்துள்ளது ஜி.எஸ்.எல்.வி மார்க் 3. அதிக எடையை தூக்கிக் கொண்டு விண்ணில் செல்லும் சக்திவாய்ந்த் ராக்கெட் இதுவாகும்.
5. இந்த ராக்கெட்டினால் 4 ஆயிரம் கிலோ எடையுள்ள செயற்கைகோள்களை புவிநிலை சுற்றுப்பாதையில் ( Geosynchronous Transfer Orbit (GTO)) எடுத்துச் செல்லும். அல்லது 10 ஆயிரம் கிலோ எடையுள்ள செயற்கைகோளினை பூமியின் தாழ்வட்டப்பாதையில் ஏவுவதற்கு இது உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
6. 170 x40400 தொலைவில் விண்ணில் ஏவப்பட்டால் அதன் பின்பு சந்திரயான் 2 சந்திரனில் தரையிறங்கும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
7. விண்ணில் ஏவப்பட்ட உடன் சந்திரயான்-2 புவியின் சுற்றுவட்டப் பாதையை அடைய 16 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும். நிலவின் சுற்றுவட்ட பாதைக்கு மாற தோராயமாக 45 நாட்கள் ஆகும். இறுதியாக செப்டம்பர் 6ஆம் தேதி நிலவில் தரை இறங்கும்.
8. சந்திரயான் விண்ணில் ஏவப்படுவதை நேரில் காண குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், ஆந்திர ஆளுநர் நரசிம்மன், ஆந்திராவின் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் சதீஷ் தவான் விண்வெளி மையத்திற்கு நேரில் செல்கின்றனர்.
9. நிலவில் இறங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இருக்கும் 4வது நாடு இந்தியாவாகும். நிலவின் தென்துருவத்தில் நீர் இருப்பதற்கான ஆதாரங்கள் குறித்து இந்த ஆராய்ச்சி நடைபெற உள்ளது. பூமியின் நீள்வட்ட பாதையில் இருந்து சந்திரனின் நீள்வட்டப்பாதைக்கு சந்திரயான் சென்றவுடன் ஆர்பிட்டர் 100 கி.மீ சுற்றுப்பாதையில் நிலவினை ஆய்வு செய்யும். லேண்டரும் ரோவரும் தான் நிலவில் தரையிறங்கும்.
10. 1471 கிலோ எடை கொண்ட லேண்டர் தன்னுடைய இடத்தில் நிலையான நின்று சந்திரனின் காலநிலையை ஆய்வு செய்யும். 6 சக்கரங்களை கொண்ட லேண்டர் நிலவில் தன்னுடைய பணிகளை மேற்கொள்ளும். ஆர்பிட்டரின் எடை 2379 கிலோ ஆகும்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்று காலை (15/07/2019) விண்ணில் ஏவப்பட இருந்த சந்திரயான் 2 தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக அந்த திட்டம் கைவிடப்பட்டது. இது குறித்த இதர தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.