Chandrayaan 2 Launch Live telecast details : அக்டோபர் 2008ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது சந்திரயான். இது இந்திய விண்வெளித்துறையில் ஒரு மாபெரும் மைல்கல். இதனைத் தொடர்ந்து 2011ம் ஆண்டிலேயே சந்திரயான் 2வை விண்ணில் ஏவ திட்டமிட்டிருந்தது இஸ்ரோ. ஆனால் ரஷ்யா தங்களின் ஒத்துழைப்பை பின்வாங்கிக் கொண்டதால், 2019ம் ஆண்டு வரை சந்திரயான் 2 தாமதமானது. ஆனால் வெறும் 6 நாட்களில் (ஜூலை 15) விண்ணில் ஏவ தயாராகி வருகிறது சந்திரயான் 2.
Chandrayaan 2 Launch Live telecast details : எங்கே எப்போது விண்ணில் ஏவப்படுகிறது சந்திரயான் 2?
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வானது ஜூலை 15ம் தேதி, ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்திருக்கும் சதீஸ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து அதிகாலை 02:51 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. ஜி.எஸ்.எல்.வி எம்.கே III (GSLV Mk-III) விண்கலம் மூலமாக இந்த செயற்கைகோள் விண்ணில் ஏவப்படுகிறது.
நிலாவில் லேண்டர் விக்ரம் செப்டம்பர் 6ம் தேதி தரையிறங்கும். தரையிறங்கியதும் ரோவர் ஒரு லூனார் நாளுக்கு சந்திரனை ஆய்வு செய்யும். (1 லூனார் நாள் என்பது பூமியில் 14 நாட்களாகும்). ஆர்பிட்டர் 1 வருடம் வரை தன்னுடைய ஆராய்ச்சியை தொடரும்.
இந்த நிகழ்வை லைவ் ஸ்ட்ரீமிங்கில் பார்ப்பது எப்படி?
இந்த நிகழ்வை நீங்கள் தூர்தர்ஷன் டிவியில் லைவாக பார்க்கலாம். தூர்தர்ஷன் டீவியின் யூட்யூப் சேனலிலும் நீங்கள் இந்த நிகழ்வினை பார்க்கலாம். ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ டிவியிலும் இந்த நிகழ்வின் நேரலை ஒளிபரப்படுகிறது.
மேலும் படிக்க : 15ம் தேதிக்காக காத்திருக்கும் சந்திரயான் 2… புதிய புகைப்படங்களை வெளியிட்ட இஸ்ரோ