china mobile phones, china mobile brands, china products, china products list, china products mobiles, சீனா, இந்தியா, சீனா மொபைல், சீனா செல்போன்
China Mobile Phones: இந்தியா, சீனா இடையேயான பதற்றம் அதிகரிக்க தொடங்கியப் பிறகு சமூக ஊடகங்களில் ஸ்மார்ட் கைபேசிகள் உட்பட சீனத்து தயாரிப்புகளை புறக்கணிக்கச் சொல்லி ஒரு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதை சொல்வது எளிது ஆனால் செயல்படுத்துவது கடினம் என தொழில் வல்லுநர்கள் நம்புகிறார்கள். சீனத்து பொருட்களுக்கு எதிரான இந்த உணர்வு ஒரு வாரத்துக்கு மேல் நீடிக்காது ஏனென்றால் வாடிக்கையாளர்களுக்கு இதை தவிர்த்தால் தற்போதைக்கு வேறு வழி இல்லை, என அவர்கள் கூறுகின்றனர்.
Advertisment
குறுகிய காலத்தில் எந்த தாக்கமும் இருக்காது ஏனென்றால் மக்களுக்கு கைபேசி வாங்க வேண்டியுள்ளது. சந்தையில் உள்ள பெரும்பாலான கைபேசிகள் சீனத்து கைபேசிகள் தான், என்கிறார் Canalys நிறுவனத்தின் அராய்ச்சி இயக்குநர் Rushabh Doshi. சீனத்து ஸ்மார்ட் போன்களின் விலை பிரிவில் அதற்கு மாற்றாக சாம்சங் (Samsung) தவிர வேறு எந்த பிராண்டும் இல்லை, என அவர் மேலும் தெரிவித்தார்.
சீனாவுக்கு எதிரான உணர்வுகள் இந்திய சந்தையில் எப்போதும் ஒரு புதிய விஷயம் அல்ல. இருந்த போதிலும் சீனத்து ஸ்மார்ட் கைபேசி உற்பத்தியாளர்கள் தான் இந்திய சந்தையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்தியாவில் உள்ள 5 முன்னனி இடங்களில் சாம்சங் மட்டும் தான் சீனத்து பின்னனி இல்லாத ஒரே நிறுவனம். Xiaomi தான் பல காலங்களாக சந்தையில் முன்னனியில் உள்ளது அதே போல் BBK க்கு சொந்தமான பிராண்டுகளான Vivo, Oppo மற்றும் Realme ஆகியவை மீதமுள்ள 70 சதவிகித ஒட்டுமொத்த சந்தையை ஆக்கிரமித்துள்ளன, என ஆய்வு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய வாடிக்கையாளர்களுக்கு வேறு வழியில்லை அவர்கள் தொடர்ந்து சீனத்து நிறுவன கைபேசிகளைத் தான் வாங்க வேண்டியுள்ளது, என்கிறார் IDC India வின் ஆய்வு இயக்குநர் Navkendar Singh. வாடிக்கையாளர் பார்வையில் இது ஒரு தூய்மையான மதிப்பு விளையாட்டு. சீனத்து ஸ்மார்ட் கைபேசி நிறுவனங்கள் இதை நிறைவேற்றுவதில் வெற்றிகரமாக உள்ளன, என அவர் விளக்குகிறார்.
எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் சீனத்து வீரர்களால் கொல்லப்பட்டதை தொடர்ந்து சீனத்து பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று விடுக்கப்பட்ட வேண்டுகோள் Xiaomi, Oppo மற்றும் Vivo கைபேசிகளின் தேவை குறையப் போவதில்லை என்கிறார் Singh. அடுத்த மூன்று அல்லது ஐந்து வாரங்களில் ஏற்படப்போகும் தாக்கம் சீனத்து தயாரிப்பு என்பதால் ஏற்பட்ட தாக்கம் என்று தவறாக புரிந்துக் கொள்ளப்படலாம். போதுமான இருப்பு இல்லாததால் அவர்கள் ஏற்கனவே போராடி வருகிறார்கள் மேலும் கைபேசிகளுக்கான தேவையும் குறைவாக தான் உள்ளது, என்கிறார் Singh.
சீனத்து பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற உணர்வு விற்பனையில் கொஞ்சம் கூட பாதிப்பை ஏறபடுத்த வில்லை என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு முன்னனி சில்லரை விற்பனையாளர். சீனத்து ஸ்மார்ட் கைபேசிகளின் விற்பனையில் இந்த வாரம் எந்த சரிவும் இல்லை என்கிறார் தென் இந்தியாவை தளமாக கொண்ட ஒரு முன்னனி கைபேசி சில்லரை விற்பனை நிலையங்களின் உயர் நிர்வாகி.
நாட்டில் 200 கைபேசி உற்பத்தி அலகுகள் செயல்படுகின்ற உலகளவில் இரண்டாவது பெரிய கைபேசி தயாரிப்பாளராக இந்தியா சமீபத்தில் உருவெடுத்துள்ளது. 2019 ஆம் நிதியாண்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட 17 மில்லியன் யூனிட்டுகளுடன் ஒப்பிடும் போது நிதியாண்டு 2020 ல் இந்தியா 36 மில்லியன் யூனிட்டுகள் ஸ்மார்ட் கைபேசிகளை ஏற்றுமதி செய்துள்ளது என மத்திய மின்னணுவியல் மற்றும் தகவ்ல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவுத்துள்ளார்.
சீன ஸ்மார்ட் கைபேசி நிறுவனங்களுக்கு இந்தியா தொடர்ந்து ஒரு கவர்ச்சிகரமான சந்தையாக திகழ்கிறது. Xiaomi, Vivo மற்றும் Oppo ஸ்மார்ட் கைபேசி நிறுவனங்கள் விநியோக சேனலகள், தயாரிப்பு அலகுகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் ஆகியவற்றை இந்தியாவில் முதலீடு செய்துள்ளன. சில நிறுவனங்களுக்கு அவர்களின் சொந்த தயாரிப்பு அலகுகள் உள்ளன, மேலும் சில ஸ்மார்ட் கைபேசிகளை அஸம்பிள் செய்வதற்காக ஒப்பந்த தயாரிப்பாளர்களின் சேவையை பெறுகின்றன. சீனத்து நிறுவனங்களை புறக்கணிக்க விடுக்கப்படும் அழைப்பு ஒரு அழிவுகரமான நடவடிக்கையாக அமைய வாய்ப்புள்ளது ஏனென்றால் இது ஒட்டுமொத்த ஸ்மார்ட் கைபேசி சுற்றுசூழல் அமைப்பை சாய்த்து விடும் மேலும் ஆயிரக்கணக்கான வேலையிழப்பும் ஏற்படும்.
சீன நிறுவனங்களுக்கு மாற்றாக Micromax, Intex மற்றும் Lava போன்ற இந்திய ஸ்மார்ட் கைபேசி தயாரிப்பு நிறுவனங்களும் உள்ளன. குருகிராமை தளமாக கொண்டு செயல்படும் Micromax நிறுவனம் ஒரு காலத்தில் இந்தியாவில் முன்னனி கைபேசி தயாரிப்பாளாராக இருந்தது. ஆனால் சீனத்து கைபேசி நிறுவனங்களுடன் போட்டி போட முடியாமல் இது நலிவடைந்துவிட்டது. Intex மற்றும் Lava போன்ற நிறுவனங்களுக்கும் இதே நிலை தான். ஆனால் Lava நிறுவனத்தின் அசல் சாதன தயாரிப்பாளர் ஒரு சீனத்து விற்பனையாளர் தான்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”