உலக சுகாதார மையமான WHO, கொரோனா வைரஸை முற்றிலுமாக தடுப்பது குறித்து தொடர்ந்து பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பெருந்திரளான மக்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவது மிகப்பெரிய சவாலான காரியமாக இருக்கின்ற நிலையில் அதிக பொறுப்புகள் உடன் தன்னுடைய பணியை அனைத்து பருவங்களிலும் தொடர்ந்து செய்துவருகிறது உலக சுகாதார மையம்.
Advertisment
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் பரபரப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் உலக சுகாதார மையம் தற்போது வாட்ஸ்ஆப்பிலும் பொதுமக்களுக்கு தேவையான செய்திகளையும் விழிப்புணர்வினையும் +41 79 893 18 92 என்ற எண்ணில் இருந்து வழங்கி வருகிறது.
இது ஒரு ஆட்டோமேட்டிக் ரிப்ளை சிஸ்டமாக செயல்படுகிறது. உங்களுக்கு எதில் எல்லாம் சந்தேகம் வரும் என்பதனை பட்டியலிட்டு அதற்கான எண்களை வழங்கியுள்ளது. அந்த எண்களை நீங்கள் டைப் செய்து அந்த எண்ணிற்கு அனுப்பினால் உங்கள் சந்தேகம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலினை உடனே விளங்குகிறது இந்த சிஸ்டம்.
முதலில் வரும் செய்தியில், தனக்கான அறிமுகத்தை கூறிய பிறகு, இதுவரை பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் எண்ணிக்கை, இறப்புவிகிதம், பாதுகாப்பு முறை, தவறான செய்திகள், பயண ஆலோசனைகள், செய்திகள் மற்றும் ப்ரெஸ் ரிலீஸ் ஆகியவை தொடர்பான நம்முடைய சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கிறது.
+41 79 893 18 92 என்ற எண்ணுக்கு நீங்கள் Hi மட்டும் அனுப்பினால் போதும். உங்களின் சந்தேகங்கள் தொடர்பான எண்களை அனுப்பினால், அது தொடர்பான தகவல்களோடு, அதனை விளக்கும் யூ.டியூப் லிங்குகள், செய்திக்கான லிங்குகள், இணைய பக்கங்களுக்கு உங்களை அது லீட் செய்து கொள்ளும்.