அமேசான் ப்ரைம் வீடியோக்களை இனி டிவியில் கண்டு களிக்கலாம்… டிஷ்டிவியின் ஹைபிரிட் செட்-டாப் பாக்ஸ் அறிமுகம்!

Dish TV partnership with Amazon Prime Video : ஏர்டெல் டிஜிட்டல் டிவி எக்ஸ்ட்ரீம் பாக்ஸ் என்ற பெயரில் ஏற்கனவே இந்த சேவையை வழங்கிவருகிறது.

Dish TV Hybrid Set-Top box Dish TV partnership with Amazon Prime Video
Dish TV Hybrid Set-Top box Dish TV partnership with Amazon Prime Video

Dish TV Hybrid Set-Top box Dish TV partnership with Amazon Prime Video :  ட்ராய் அமைப்பின் புதிய கேபிள் டிவி கொள்கைகள் வெளியான பிறகு டி.டி.எச் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவைகளில் பெரிய மாற்றங்கள் உருவாகி வருகிறது. வாடிக்கையாளர்களை தக்க வைக்கவும், புதிய வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கவும் பல்வேறு சிறப்பு சலுகைகள் மற்றும் திட்டங்களை டி.டி.எச் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றன. ஏர்டெல் டிஜிட்டல் டிவியை தொடர்ந்து டிஷ் டிவியும் தங்களுடைய ஹைப்ரிட் செட்-டாப் பாக்ஸ் சேவையை துவங்கியுள்ளது.

Hybrid Set-Top Boxes என்றால் என்ன?

இணைய ஒளிபரப்பு சேவைகளை வழங்கும் ஒ.டி.டி நிகழ்ச்சிகளையும், சேட்டிலைட் தொலைக்காட்சிகளையும் ஒருங்கே மக்கள் பார்க்க வழிவகை செய்வது தான் இந்த ஹைப்ரிட் செட்-டாப் பாக்ஸ். ஏர்டெல் டிஜிட்டல் டிவி எக்ஸ்ட்ரீம் பாக்ஸ் என்ற பெயரில் ஏற்கனவே இந்த சேவையை வழங்கிவருகிறது. தற்போது இந்த வரிசையில் டிஷ்டிவியும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : மூன்று மாதத்திற்கு அன்லிமிட்டடா நெட்ஃப்ளிக்ஸில் வெப்சீரிஸ் பாருங்க… ஏர்டெலின் சூப்பர் ப்ளான்

அமேசான் ப்ரைம் வீடியோவுடன் இணையும் டிஷ் டிவி

ஏற்கனவே பல்வேறு டிடிஎச் நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு சேவைகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. தற்போது டிஷ் டிவி அமேசான் ப்ரைம் வீடியோவில் இணைந்திருப்பதால் வாடிக்கையாளர்கள் தங்கள் டிவியில் அமேசான் ப்ரைம் வீடியோக்கள் அனைத்தையும் பார்க்க இயலும். ஹாலிவுட், பாலிவுட், இந்திய பிராந்திய மொழிப்படங்கள் மற்றும் அனைத்துவிதமான ப்ரைம் சேவைகளையும் மக்கள் எந்த வித பிரச்சனையும் இன்றி ரசித்து பார்க்கலாம்.

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Dish tv hybrid set top box dish tv partnership with amazon prime video

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com