சன் டேரக்ட்டை தொடர்ந்து டிஷ் டீவி என்.சி.எஃப் கட்டணமும் ரத்து

எஸ்.டி. சேனல்கள் 6 ரூபாயில் இருந்தும், எச்.டி சேனல்கள் 19 ரூபாயில் இருந்தும் ஆரம்பமாகிறது.

Dish TV offers unlimited FTA channels  : சன் டேரக்ட்டை தொடர்ந்து டிஷ் டீவி என்.சி.எஃப் கட்டணமும் ரத்து செய்யப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி டிஷ் டீவி வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அடிப்படைக் கட்டணத்தில் (ரூ.130) எண்ணற்ற இலவச சேனல்களை கண்டுகளிக்கலாம்.

Dish TV offers unlimited FTA channels

ஏற்கனவே சன் டேரக்ட், டாட்டா ஸ்கை போன்ற கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் தங்களின் என்.சி.எஃப் கட்டணத்தை ரத்து செய்துவிட்டனர். புதிதாக வந்திருக்கும் இந்த அறிவிப்பின்படி ரூ.130 கட்டணத்திற்கு வாடிக்கையாளர்களால் 189 இலவச சேனல்களை கண்டு ரசிக்கலாம்.

இது இலவச சேனல்களுக்கு மட்டுமே பொருந்தும். இதர எஸ்.டி மற்றும் எச்.டி சேனல்களுக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.  ஆனால் இதர சேனல்களை தேர்வு செய்யும் போது வாடிக்கையாளர்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.

நிறைய சேனல்களை எஸ்.டி மற்றும் எச்.டி என இருவாரியாக பிரித்து வைத்துள்ளது. எஸ்.டி. சேனல்கள் 6 ரூபாயில் இருந்தும், எச்.டி சேனல்கள் 19 ரூபாயில் இருந்தும் ஆரம்பமாகிறது.

100 சேனல்களுக்கு மேல் தேர்வு செய்தால் அதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படும். 25 சேனல்கள் வரை கூடுதல் சேனல்களுக்கு 20 ரூபாய் தனியாக வசூலிக்கப்படும்.  125 முதல் 150 வரை என்றால் அதற்கு தனியாக ஒரு 20 ரூபாயை கட்டணமாக கட்ட வேண்டும்.

மேலும் படிக்க : ட்ராய் புதிய கேபிள் சட்டம் : ஏர்டெல், டாட்டா ஸ்கை, டிஷ் டிவிகளில் சேனல்களை தேர்வு செய்வது எப்படி ?

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close