ட்ராய் புதிய கேபிள் சட்டம் : ஏர்டெல், டாட்டா ஸ்கை, டிஷ் டிவிகளில் சேனல்களை தேர்வு செய்வது எப்படி ?

How to Choose Channel Packs for Tata Sky, Dish TV and Airtel : 130 + 18% ஜி.எஸ்.டியுடன் சேர்த்து 153 ரூபாய் என்ற அடிப்படை கட்டணத்தில் மாற்றம் ஏதும் இல்லை.

By: Updated: January 31, 2019, 12:11:40 PM

TRAI’s New Rules for DTH and Cable TV : பிப்ரவரி 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது இந்திய தொலைத்தொடர்பு ஆணையம் கொண்டு வந்துள்ள புதிய கேபிள் டிவி சட்டம். இதன் மூலம் தங்களுக்கு விருப்பமான சேனல்களுக்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும். வாடிக்கையாளர்கள் தாங்கள் உபயோகிக்கும் டி.டி.எச். சேவைகள் மூலம் தங்களுக்கு விருப்பமான சேனல்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

ஏற்கனவே டாட்டா ஸ்கை, ஏர்டெல், டிஷ் டீவி போன்ற ஆப்பரேட்டர்கள் சேனல்களுக்கான விலையை அறிவித்துவிட்டனர்.

இந்த புதிய சட்டத்தின் படி வாடிக்கையாளர்கள் 130 ரூபார் நெட்வொர்க் கெப்பாசிட்டி ஃபீஸாக 130 ரூபாய் கட்டணமும் + 18% ஜி.எஸ்.டி கட்டணமும், அதன் பின்னர் தங்கள் தேர்வு செய்திருக்கும் சேனல்களுக்கான கட்டணமும் மாதம் மாதம் செலுத்த வேண்டும்.

உங்களால் ஹை டெஃபனிஷன் மற்றும் ஸ்டாண்டர்ட் டெஃபனிஷன் என்ற இரண்டு வகையான சேனல்களை தேர்வு செய்து கொள்ள இயலும். ஆனால் ஒவ்வொரு HD சேனலும் இரண்டு SD சேனல்களுக்கு சமமாக கணக்கில் கொள்ளப்படும்.

இலவச சேனல்கள் அல்லது கட்டண சேனல்கள் அல்லது பொக்கெட்ஸ் ஆஃப் சேனல்கள் என வாடிக்கையாளர்கள் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம்.

100 சேனல்களுக்கு மேல் தேர்வு செய்தால் அதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படும். 25 சேனல்கள் வரை கூடுதல் சேனல்களுக்கு 20 ரூபாய் தனியாக வசூலிக்கப்படும்.

125 முதல் 150 வரை என்றால் அதற்கு தனியாக மற்றும் ஒரு 20 ரூபாயை கட்டணமாக கட்ட வேண்டும். வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு, 534 இலவச சேனல்கள் இருக்கின்றன. அதற்காக எந்த கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.

ட்ராய்யின் புதிய சட்டம்… பிடித்த சேனல்களுக்கான கட்டணங்கள் எப்படி வசூலிக்கப்படுகிறது?

ஏர்டெல் டிஜிட்டல் டிவியில் உங்களுக்கு விருப்பமான சேனல்களை தேர்வு செய்வது எப்படி ?

TRAI's New Rules for DTH and Cable TV

மை ஏர்டெல் ஆப் அல்லது ஏர்டெல்லின் அதிகாரப்பூர்வ இணையத்திற்கு செல்லுங்கள். உங்களின் மொபைல் நம்பர் மற்றும் ஓ.டி.பி. கொடுத்து லாக் இன் செய்து கொள்ளுங்கள். அதில் ரெக்கமெண்டட், ப்ராட்காஸ்டார், அல்லது ஆலா கார்ட்டே பேக்குகள் இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த 100 சேனல்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

தேர்வு செய்யும் போது அதன் கட்டணங்கள் வாடிக்கையாளர்களுக்கு காட்டப்படும். உங்களுக்கு அந்த கட்டணம் உங்களின் பட்ஜெட்டிற்குள் இருந்தால் அதனை கன்பார்ம் செய்து கொள்ளலாம்.

ரெக்கமண்டட் என்ற பேக்கை நீங்கள் தேர்வு செய்ய வேண்டாம். 25 இலவச சேனல்களை வழங்குகிறது ஏர்டெல். அதனால் நீங்கள் உங்களுக்கு விருப்பமான சேனலை தேர்வு செய்யும் போது 25ல் இருந்து தான் கணக்கு தொடங்கும்.

ஜி.எஸ்.டி வரியுடன் தான் கட்டணங்கள் அங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. எஸ்.டி மற்றும் ஹெச்.டி என இரண்டு சேனல் குவாலிட்டிகளில் நீங்கள் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம்.

TRAI’s New Rules for DTH and Cable TV : டாட்டா ஸ்கையில் பிடித்த சேனல்களை தேர்வு செய்வது எப்படி ?

டாட்டா ஸ்கையும் உங்களுக்கு மூன்று வித்தியாசமான தேர்வுகளைத் தான் தருகிறது. உங்களுக்கு விருப்பமான டாட்டா ஸ்கை மாதாந்திர பேக்குகளையும் தேர்வு செய்து கொள்ளலாம் அல்லது உங்களுக்கு விருப்பமான 100 சேனல்களையும் தேர்வு செய்து கொள்ளலாம்.

என்.சி.எஃப். எனப்படும் நெட்வொர்க் கெப்பாசிட்டி ஃபீஸில் எந்த மாற்றமும் இல்லை. 130 + 18% ஜி.எஸ்.டியுடன் சேர்த்து 153 ரூபாய் என்ற அடிப்படை கட்டணத்தில் மாற்றம் ஏதும் இல்லை.

டாட்டா ஸ்கை இணையத்திற்கு சென்று தங்களுக்கு விருப்பமான சேனல்களை தேர்வு செய்து கொள்ளலாம். அதற்கான கட்டணங்கள் டிஸ்பிளே ஆகும். ஏற்கனவே ஒரு வருடத்திற்கான முழு சந்தாவையும் வாடிக்கையாளர்கள் கட்டியிருந்தால், புதிய சேனல்களின் தேர்வுகளுக்கு ஏற்றவாறு கட்டணங்களை அதில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம்.

இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க 

TRAI's New Rules for DTH and Cable TV TRAI’s New Rules for DTH and Cable TV

டிஷ் டிவியில் எப்படி சேனல்களை தேர்வு செய்வது ?

டிஷ் டிவி பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு வரும் ஓ.டி.பியை வைத்து வெப்சைட் அல்லது செயலியில் லாகின் செய்து கொள்ளலாம். டிஷ் டிவியும் மூன்று விதமான ஆப்சன்களை வைத்துள்ளது. டிஷ் காம்போ, சேனல்கள், பொக்கெட்டுகள்.

தங்களுக்கு விருப்பமான சேனல்களை மொழி அல்லது கேட்டகிரி மூலமாக தேர்வு செய்து கொள்ளலாம் வாடிக்கையாளர்கள்.

காம்போ பேக் என்பது டிஷ் டிவியே வழங்கும் ஒரு ஆப்சன். உங்களுக்கு தேவையான சேனல்களை தேர்வு செய்ய சேனல்கள் லிஸ்டை பயன்படுத்தலாம்.

முதல் 100 அல்லது அடிப்படையாக தரப்பட வேண்டிய 100 சேனல்களை டிஷ் டிவி ஆப்பரேட்டர்களே தந்துவிடுவார்கள். அதில் உங்களுக்கு தேவையான சேனல்களை வைத்தும், தேவையற்றதை நீக்கியும் கொள்ளலாம்.

நீங்கள் தேர்வு செய்யும் சேனல்களுக்கான கட்டணங்கள் திரையின் வலது பக்கத்தில் தெரியும். தூர்தர்சன் சேனல்கள் அடிப்படை 100 சேனல்களில் கட்டாயம் இடம் பெற்றிருக்கும். அதனை வாடிக்கையாளர்கள் நீக்க இயலாது.

TRAI's New Rules for DTH and Cable TV TRAI’s New Rules for DTH and Cable TV

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Trais new rules for dth and cable tv how to choose channel packs for airtel tata sky and dish tv

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X