ஆப்பிள் அக்டோபர் ஈவண்ட் : செப்டம்பர் 12ம் தேதியைப் போலவே அக்டோபர் 30திற்கும் காத்திருக்கிறார்கள் ஆப்பிள் ப்ராடக்டுகளின் பிரியர்கள். ஆப்பிள் தன்னுடைய மூன்று புதிய செல்போன்களையும், ஆப்பிள் வாட்சினையும் கடந்த செப்டம்பர் 12ம் தேதி வெளியிட்டது.
இந்நிலையில் ப்ரூக்லினில் மீண்டும் ஒரு மெகா ஈவண்ட்டினை நடத்த இருக்கிறது ஆப்பிள். ஆப்பிள் மடிக்கணினிகளான மேக்புக்குகளின் ஹார்ட்வேர்களில் பெரிய மாற்றங்களை கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதே போல் இந்நிகழ்வில் புதிய ரக மேக்புக் ஏர், மற்றும் ஐபேட்கள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எங்கே நடக்க இருக்கிறது ஆப்பிள் அக்டோபர் ஈவண்ட் ?
இந்நிகழ்ச்சி ப்ரூக்ளின் அகாடெமி ஆஃப் மியூசிக்கில் இருக்கும் ஹோவர்ட் கில்மன் அரங்கில் நடைபெற இருக்கிறது. நியூயார்க் நகரில் அமெரிக்க நேரப்படி காலை 10 மணிக்கு இந்நிகழ்வு நடைபெற இருக்கிறது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு இந்நிகழ்வு ஆரம்பிக்கிறது.
ஆப்பிள் பயனாளிகள் லைவ்ஸ்ட்ரீமில் இந்த நிகழ்ச்சியினை தங்களின் ஐபோன்கள், ஐபேட்கள், மற்றும் மேக்கில் பார்த்துக் கொள்ளலாம். எட்ஜ் எக்ஸ்போளரரிலும் இந்நிகழ்வினை பார்க்கலாம்.
மேலும் படிக்க : அக்டோபர் ஆப்பிள் நிறுவனத்திற்கு ஏன் அவ்வளவு முக்கியமான மாதம் ?
ஐபேட் ப்ரோ
இந்நிகழ்வில் வெளியிடப்பட இருக்கும் ஐபேட் புரோக்களில் ஒன்று 11 இன்ச் ஆகும். மற்றொன்று 12.9 இன்ச் ஆகும். மிகவும் குறைவான எடை கொண்ட, தின்னர் வெர்ஷன், மினிமல் பேசல் விட்த்துடன் இந்த ஐபேட் புரோக்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் XSல் இணைக்கப்பட்டிருக்கும் ட்ரூ டெப்த் கேமராவை இதிலும் இணைத்திருக்கிறார்கள்.
வெளிவர இருக்கும் இந்த ஐபேட் ப்ரோக்கள் மிக வேகமாக சார்ஜ் ஆகும் தொழில்நுட்பத்தினை கொண்டிருக்கிறது. யூ.எஸ்.பி டைப் சி சார்ஜருடன் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய மேக்
ஸ்டீவ் ஜாப் ஆப்பிளிற்கு திரும்பி வரவும் உருவாக்கப்பட்டது தான் மேக் வரிசை கணினிகள். அந்த கணினிகளின் ஹார்ட்வேர்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளதாகவும், மாற்றம் செய்யப்பட்ட மேக்குகளை இந்நிகழ்வில் ஆப்பிள் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்பிள் அக்டோபர் ஈவண்ட் எதிர்பார்ப்புகள்
மேக்புக் ஏரில் புதிய தொழில் நுட்பம் பயன்படுத்தி இருக்கலாம் அல்லது புதிய மேக்புக் ஏரினை அறிமுகப்படுத்தவும் வாய்ப்புகளும் அதிகமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. 12 இன்ச் மேக்புக்கின் தயாரிப்பு நிறுத்தப்பட உள்ளது என்ற வதந்திகளும் வெளியாகி வருகின்றன. இந்நிகழ்வில் ஆப்பிள் பென்சில் 2 மற்றும் வெகுநாட்களாக காத்துக் கொண்டிருக்கும் வயர்லெஸ் சார்ஜிங் மேட்டான ஏர்ப்பவரை வெளியிடுமா ஆப்பிள் என்ற எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆப்பிள் ப்ரியர்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.