/tamil-ie/media/media_files/uploads/2017/07/Dish.jpg)
DTH customers FTA channels connections details
DTH customers FTA channels connections details : கடந்த வாரம் லோக் சபாவில் டி.டி.எச். சேவையை பெறும் வாடிக்கையாளர்களின் உரிமைகள் குறித்து எம்.பிக்கள் சுதாகர் துக்காராம் ஷ்ராங்கே மற்றும் ப்ரதிமா பௌமிக் ஆகியோர் கேள்வி எழுப்பினர். ஒரு முறை இன்ஸ்டாலேஷன் சார்ஜ் கட்டிய பிறகு, வாடிக்கையாளர்களுக்கு தூர்தசன் போன்ற சேனல்களை இலவசமாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அதற்கான வழிமுறைகள் என்ன பின்பற்றப்படுகிறது என்றும் கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு பதில் அளித்த தொழில்நுட்பம் மற்றும் ப்ராட்காஸ்டிங் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ”புதிய ட்ராய் கொள்கையானது வாடிக்கையாளர்களுக்கு குறைவான கட்டணத்தில் நிறைவான சேவையை உறுதி செய்கிறது. வாடிக்கையாளர்கள் செலுத்தும் அடிப்படை கட்டணமானது நெட்வொர்க் கெப்பாசிட்டி ஃபீஸ் எனப்படும். அது டிவி சேனல்களின் டிஸ்ட்ரிபூட்டர்களுக்கு வழங்கப்படும் கட்டணம். முதல் 100 எஸ்.டி. சேனல்களுக்காக வழங்கப்படும் கட்டணம் அது. வரி இல்லாமல் வாடிக்கையாளர்கள் இந்த சேவைகளைப் பெற மாத மாதம் ரூ. 130-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும்" என்று அவர் கூறினார்.
தூர்தசன் மட்டுமல்லாமல் அனைத்து சேனல்களையும் பெற்றிட டிஷ்ட்ரிபுயூசன் ப்ளாட்ஃபார்ம் ஆப்பரேட்டர்கள் விதிக்கும் கட்டணம் தான் என்.சி.எஃப். என்று அவர் அறிவித்துள்ளார். இந்தியா முழுவதும் 33 மில்லியன் குடும்பங்களில் தூர்தசன் வழங்கும் இலவச டிஷ் டிவி சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். டாட்டா ஸ்கை, ஏர்டெல், டிஷ் டிவி மற்றும் சன் டிவி என இந்த தனியார் டிஷ் சேவைகளை 67 மில்லியன் குடும்பங்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.