Ducati Diavel 1260, Ducati Diavel 1260 S : இந்தியாவில் வெளியானது டுகாட்டியின் டியாவெல் பைக். சூப்பர் பைக் ரைடர்களின் சிம்ம சொப்பனமாக விளங்கும் டுகாட்டியின் பைக் என்பதால் இந்த பைக்கிற்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகள் இந்தியாவில் நிலவி வந்தன. இந்த பைக்கின் எஸ் வேரியண்டும் வெளியாகியுள்ளது.
டியாவல் 1260 பைக்கின் ஆரம்ப விலை 17.70 லட்சம் ஆகும். இதன் எஸ் வேரியண்ட் விலை இதை விட 1.55 லட்சம் அதிகமாக, ரூ. 19.25 லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆக உள்ளது. ஆகஸ்ட் 9ம் தேதி முதல் புக்கிங் இந்தியாவின் அனைத்து டுகாட்டி டீலர் ஷிப்களிலும் நடைபெற்று வருகிறது.
டியாவெல் ஸ்டாண்டர்ட் கிரே நிறத்தில் மட்டும் வர, எஸ் வேரியண்ட் கிரே அல்லது கறுப்பு நிறங்களில் வெளியாகிறது.
1262 சி.சி. எல். டிவின் (1262cc L-twin) எஞ்சினை கொண்டுள்ளது. 9500 ஆர்.பி.எம்மின் போது 159 பி.எஸ் திறனை உருவாக்குகிறது. டார்க் 129NM at 7500rpm. 100Nm டார்க்கினை வாடிக்கையாளர்கள் 3500rpm -களில் இருந்தே பெற இயலும். இந்த திறன் மற்றும் டார்க் நேரடியாக செய்ன் ட்ரைவ் மூலமாக பின்பக்க சக்கரத்திற்கு கடத்துகிறது. அங்கு 6-ஸ்பீட் ஹைட்ராலிக் அக்யூட்டட் ட்ரான்ஸ்மிஷனுடன் கூடிய ஸ்லிப்பர் க்ளட்ச் அமைக்கப்பட்டுள்ளது.
எலெக்ட்ரானிக் சாதனங்களின் உதவியுடன் இந்த பைக் மேலும் சிறப்பான அம்சங்களை பெற்றுள்ளது. ஸ்போர்ட், டூரிங், மற்றும் அர்பான் என்று மூன்று விதமான ரைடிங்க் மோட்களை இது கொண்டுள்ளது. 8-level traction control, 8-level wheelie control, Ducati Power Launch Evo and cornering ABS போன்றவை இதன் முக்கிய சிறப்பம்சங்களாக உள்ளன.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook
Web Title:Ducati diavel 1260 ducati diavel 1260 s pricespecifications power color and more
அரசியலை விட்டு விலகுகிறேன், தொண்டர்களுக்கு நன்றி! – சசிகலா அறிவிப்பு
எம்ஜிஆர் குரல்… எம்ஜிஆர் வேடம்… நடிகை லதா! விஜய் டிவியில் புதிய நிகழ்ச்சி வீடியோ
ஜேஇஇ மெயின்: மார்ச் மாத தேர்வுக்கு விண்ணப்ப செயல்முறை தொடங்கியது
நீச்சல் குளம்… கலர்ஃபுல் பிகினி… காலை உணவு! டிடி கொண்டாட்ட வீடியோ
அப்பார்ட்மென்ட் வாசிகளும் மாடித் தோட்டம் அமைக்கலாம்: இதைப் படிங்க!
பாஜகவுக்கு வீழ்ச்சி… ஆம் ஆத்மிக்கு எழுச்சி! டெல்லி இடைத்தேர்தல் உணர்த்துவது என்ன?