SkullCandy Push Wireless Earbuds : ஒரு நல்ல பாடலை அல்லது இசையை ரசிக்க ஒரு ஹெட்செட் இன்று அத்தியாவசிய தேவையாகவே இருக்கிறது. சில ஆண்டுகளாக ஸ்கல்கேண்டி ஹெட் செட் அனைவரின் தனிப்பட்ட தேவைகளிலும் மிக முக்கிய ஒரு அங்கமாக மாறிவிட்டதை யாராலும் மறுக்கவே இயலாது என்பது உண்மை. இசைப் பிரியர்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது ஸ்கல்கேண்டியின் புஷ் வயர்லெஸ் இயர் பட்ஸ் (SkullCandy Push wireless earbuds).
SkullCandy Push Wireless Earbuds - முதற்பார்வை
இந்த வயர்லெஸ் செக்மண்டில் வரும் இதர ஹெட்போன்களின் வடிவமைப்பினைப் போலவே இதன் வடிவமைப்பும் உள்ளது. மற்ற ஹெட்செட்களை காதில் பொருத்துவது போல் பொருத்தினால் எந்நேரமும் அது கீழே விழுந்துவிடும். அதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ஆனால் இயர்பாட்கள் மேல் நோக்கி இருக்கும் வகையில் பொருத்தினால் சரியாக பொருந்திக் கொள்கிறது. ஓடும் போதும், உடற்பயிற்சி செய்யும் போதும் இந்த ஹெட்போன் கீழே விழுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளது.
பொருத்தப்பட்டிருக்கும் எல்.ஈ.டி லைட்கள், இயர்போன்கள், மியூசிக் சோர்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கிறதா என்பதை கண்டறிய பயன்படுத்தப்பட்டுள்ளது. சார்ஜிங் டாக் ஹெட்செட்டின் பக்கவாட்டில் கொஞ்சம் பெரிதாக இருப்பதால்,பயன்படுத்தும் போது கொஞ்சம் சிரமம் இருப்பதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
ஒரு முறை சார்ஜ் செய்தால் கிட்டத்தட்ட 10 மணி நேரம் வரை நீங்கள் இடைவிடாமல் இதனை பயன்படுத்தி இசையினை ரசிக்கலாம். இதில் இருந்து வெளிப்படும் இசை மிகவும் துல்லியமாக ரசிக்கவைக்கிறது.
இதன் விலை 9,999 மட்டுமே
மேலும் படிக்க : வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுமா ஆல்பா