வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றுமா சோனி ஆல்பா 6400 ?

18-135 எம்.எம். லென்ஸுடன் கூடிய கேமராவின் விலை ரூ. 1,09,000.

Sony Alpha 6400 review :  48 எம்.பி. கேமராக்கள் கொண்ட ஸ்மார்ட்போன்கள், பாப் அப் செல்ஃபி கேமராக்கள், ஹொல் செல்ஃபி கேமராக்கள் என்று ஸ்மார்ட்போனில் ஆயிரம் கேமரா சிறப்பம்சங்கள் வந்தாலும், டி.எஸ்.எல்.ஆர். கேமராக்களுக்கு இருக்கும் மதிப்பானது என்றும் மகத்தானது.

மிரர்லெஸ் கேமராக்கள் தற்போது புகைப்படக்காரர்களின் கனவாக மாறி வருகிறது. சோனி நிறுவனம் மிரர்லெஸ் கேமராக்களை மிகவும் நியாயமான விலையில் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறது.

பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டு தற்போது வாடிக்கையாளர்கள் மனதில் இடம் பெற்றிருக்கிறது சோனியின் ஆல்ஃபா 6400.

Sony Alpha 6400 சிறப்பம்சங்கள்

இதற்கு முன்பு மக்கள் மத்தியில் நன்கு ஹிட் அடித்த ஆல்பா 6300 கேமராவிற்கு பின்பு இந்த கேமரா விற்பனைக்கு வந்துள்ளது.  0.05 நொடிகளில் ஒரு புகைப்படத்தை ஆட்டோ ஃபோகஸ் செய்ய 6300 மாடலால் முடிந்தது. தற்போது 0.02 நொடிகளில் இந்த புதிய கேமரா மூலமாக ஃபோட்டோ எடுக்க இயலும்.

24.2 மெகாபிக்சல் எக்ஸ்மோர் சிமோஸ் சென்சார் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது

சோனி ஈ மௌண்ட் லென்ஸ்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன

2.95 இன்ச் வைட் டைப் டி.எஃப்.டி எல்.சி.டி டச் ஸ்கிரீன் பொருத்தப்பட்டுள்ளது

ஐ.எஸ்.ஓ 32000 ஆகும்.

எடை சுமார் 403 கிராம்கள்

மேலும் படிக்க : உங்களை பின்தொடரும் உரிமையை உங்களின் ஸ்மார்ட்போனிற்கு தராதீர்கள் !

Sony Alpha 6400 விலை

இதன் கேமரா பாடியின் விலை மட்டும் ரூ.75,990 ஆகும். 18-135 எம்.எம். லென்ஸுடன் கூடிய கேமராவின் விலை ரூ. 1,09,000.

Sony Alpha 6400-ல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

 

 

 

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close