Facebook New Feature: முகநூல் அவதார் (Facebook Avatars) அம்சம் சமீபத்தில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐரோப்பா மற்றும் கனடா நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதிக பயனர் கணக்குகள் உள்ள இந்தியாவில் முகநூல் நிறுவனம் இந்த அம்சத்தை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சத்தின் உதவியோடு இந்திய முகநூல் பயனர்கள் அரட்டைகளில் (chats) தங்களை போன்ற கார்டூன் வடிவங்களை உருவாக்க முடியும். இது Snapchat’s Bitmoji மற்றும் Apple’s Memoji ஐ போன்றது.
இந்த புதிய முகநூல் அவாதார் அம்சம் மூலம் பயனர்கள் தங்களது கார்டூன் வடிவங்களை உருவாக்கி அதை அடுத்தவர்களுடன் பகிர முடியும். இந்த கார்டூன் வடிவங்களை பயனர்கள் முகநூலில் உள்ள இடுகைகளுக்கு கருத்து கூறும் போதோ (commenting on posts) அல்லது profile picture ஆக வைக்கவோ அல்லது Messenger chat windows லோ பயன்படுத்தலாம். இது தவிர பயனர்கள் இந்த அவதார்களை Snapchat, Twitter மற்றும் Instagram போன்ற வேறு ஆப்களுக்கு அனுப்பவும் முடியும்.
டிக்- டாக் போனால் என்ன? உங்களுக்கு இத்தனை ஆப்ஷன் இருக்கு!
உங்கள் முகநூல் அவதாரை உருவாக்கி அதை நண்பர்களுக்கு அனுப்புவது எப்படி என்பதை எளிய வழிகளில் பின்வருமாறு விளக்கியுள்ளோம்.
முகநூல் அவதாரை (Facebook Avatar) எவ்வாறு உருவாக்குவது:
* Google Play Store அல்லது Apple App Store மூலமாக முகநூலின் சமீபத்திய பதிப்பை அப்டேட் செய்துக் கொள்ளவும்.
* Facebook appல் உள் நுழைந்து மேல் வலது ஓரத்தில் உள்ள hamburger menu ஐ தட்டவும். iOS பயனர்களுக்கு hamburger menu கீழ் வலது ஓரத்தில் இருக்கும்.
* ஸ்க்ரால் செய்து கீழே வந்து ‘See More’ விருப்ப தேர்வை தேர்வு செய்யவும்.
* ‘Avatars’ விருப்ப தேர்வை சொடுக்கவும்.
* கொடுக்கப்பட்டுள்ள தலை முடி ஸ்டைல், முக அமைப்பு, முகத்தில் உள்ள கோடுகள் (face lines) மற்றும் பலவற்றைக் கொண்டு உங்கள் அவதாரத்தை நீங்கள் வடிவபடுத்திக் கொள்ளலாம். உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப உங்கள் அவதாரத்தை நீங்கள் வடிவமைத்துக் கொள்ள, ஆப்பில் நீங்கள் தேர்வு செய்ய பல customisations உள்ளது.
* அவதாரத்துக்கு ஒரு உடல் அமைப்பையும் நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஜியோ, ஏர்டெல், வோடஃபோன்: ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’க்கு எது பெஸ்ட்னு பாருங்க!
* அனைத்து customisations களையும் செய்து முடித்த பின்னர் மேல் வலது ஓரத்தில் உள்ள done icon ஐ சொடுக்கவும்.
* ஆப் உங்கள் அவதாரத்தை உருவாக்கி அதை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம் என்று உங்களுக்கு உதவிக்குறிப்புகளைத் தரும்.
* அடுத்து உங்கள் அவதாரத்துக்கு ஒரு pose ஐ தேர்வு செய்யது அதை உங்கள் இடுகையில் பகிரலாம்.
* உங்கள் முகநூல் அவதாரத்தை பயன்படுத்த text field ல் உள்ள smiley face icon ஐ சொடுக்கி அவதாரத்தை sticker section ல் இருந்து தேர்வு செய்யவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.