Facebook integrates WhatsApp Instagram Messenger : சமூக வலைதளங்களில் மிக முக்கிய செயலிகளான வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், மற்றும் மெசேஞ்சர் ஆகியவற்றை இணைக்க புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முகநூல் நிறுவனம் இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் , மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் ஆகியவற்றை ஒன்றாக இணைக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் வெவ்வேறு பிளாட்ஃபார்மில் இருந்து வரும் மெசேஜ்களை ஒரே செயலியில் பார்த்து, அதற்கான பதில்களை ஒரே இடத்தில் இருந்து பயனாளிகளால் அறிவிக்க இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.
திட்டம் செயல்பாட்டிற்கு வர அதிக நாட்கள் ஆகும்
அனைத்தையும் ஒன்று இணைத்தாலும் கூட, பயனாளிகளின் வசதிகளுக்கேற்ப தனித்தனியாகவும் இந்த செயலிகள் இயங்கும். ஆனால் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வர அதிக நாட்களாகும் என்றும் முகநூல் நிறுவனம் அறிவித்திருக்கிறது.
இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால், முகநூல் பயனாளி ஒருவரால், தன்னுடைய நண்பரின் வாட்ஸ்ஆப்பிற்கு மெசேஜ் அனுப்பிக் கொள்ளலாம். ஆனால் இந்த மூன்று செயலிகளும் ஒரே கோரில் இயங்காததால், இதனை செயல்படுத்த அதிக காலம் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
முகநூல் நிறுவனம் பயனாளிகளின் தனித்தகவல்களை திருடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள இந்த நிலையில் இப்படியான ஒரு திட்டத்தை அறிமுகம் செய்யும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
இதுவரையில் மெசெஞ்சர், வாட்ஸ்ஆப், மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் தனித்தனியாக ஒன்றிற்கு மற்றொன்று போட்டியாகாவே இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. பயனாளிகள் தங்களின் தகவல் பரிமாற்ற அனுபவத்தை சிறப்பாக பெற வேண்டும் என்பதே எங்களின் லட்சியம் என்று மோட்டோ கூறியுள்ளது.
மேலும் படிக்க : 2019ல் வாட்ஸ்ஆப்பில் வர இருக்கும் புதிய மாற்றங்கள் என்னென்ன ?