பேஸ்புக்கிலும் செயல்படும் டார்க் மோட்! பயன்படுத்துவது எப்படி ?

அனிமேசன் முடிந்தவுடன் உங்களின் சாட் பகுதியில் டார்க் மோட் செட்டிங்கிற்கான பாப்-அப்கள் உருவாகும்

Facebook Messenger dark mode : வாட்ஸ்ஆப்பிற்கு பிறகு அதிக அளவு மக்கள் பயன்படுத்தி வரும் மற்றொரு செயலி பேஸ்புக் மெசெஞ்சர்.

ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ் இந்த இரண்டு இயங்கு தளங்களிலும் செயல்பட்டு வரும் பேஸ்புக் மெசெஞ்சரில் டார்க் மோடினை செட் செய்வது எப்படி என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.

Facebook Messenger dark mode

பேஸ்புக் மெசெஞ்சரில் உங்களுக்கு விருப்பமான ஒரு சாட் த்ரெட்டை தேர்வு செய்யவும்.

மெசேஜ் கம்போஸ் விண்டோவில் எமோஜி ஃபேஸ் ஐகான் இன்புட்டை தேர்வு செய்யவும்.

அதில் வளர்பிறை போன்று இருக்கும் ஸ்மைலியை தேர்வு செய்து “செண்ட்” செய்யவும்.

பின்னர் அந்த நிலவு உங்களின் சாட்டில் மழை போல் பொழியும் கிராஃபிக் வீடியோவை காட்டும்.

Facebook Messenger dark mode

அனிமேசன் முடிந்தவுடன் உங்களின் சாட் பகுதியில் டார்க் மோட் செட்டிங்கிற்கான பாப்-அப்கள் உருவாகும். அதை தேவை என்றால் ஆன் செய்து கொள்ளலாம். இல்லை என்றால் ஆஃப் செய்தும் கொள்ளலாம்.

மேலும் படிக்க : ஜியோ வழங்கும் 5 முக்கியமான டேட்டா பேக்குகள் எவை ?

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close