வீட்டிலிருந்து வேலை: ரூபாய் 40,000/-க்கும் குறைவான விலையில் ஐந்து லேப்டாப்

Cheapest Laptops: கோவிட்-19 காரணமாக நாடு முழுவதும் அமல்படுத்டப்பட்டுள்ள ஊரடங்கால் பல மில்லியன் இந்தியர்கள் இப்போது வீட்டிலிருந்து வேலைப் பார்த்து வருகின்றனர். நோவல் கரோனா வைரஸ் நோய் பரவும் வேகத்தை கருத்தில் கொண்டு, நம்மில் பெரும்பாலோர் அலுவலகத்திற்குச் செல்வது பற்றி யோசிப்பது கூட சாத்தியமில்லை. இந்த பிரச்சனை பல…

By: Updated: June 6, 2020, 05:03:18 PM

Cheapest Laptops: கோவிட்-19 காரணமாக நாடு முழுவதும் அமல்படுத்டப்பட்டுள்ள ஊரடங்கால் பல மில்லியன் இந்தியர்கள் இப்போது வீட்டிலிருந்து வேலைப் பார்த்து வருகின்றனர். நோவல் கரோனா வைரஸ் நோய் பரவும் வேகத்தை கருத்தில் கொண்டு, நம்மில் பெரும்பாலோர் அலுவலகத்திற்குச் செல்வது பற்றி யோசிப்பது கூட சாத்தியமில்லை.

இந்த பிரச்சனை பல நாட்கள் தொடரும் என்பதை புரிந்துக் கொண்ட பல நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களிடம் ஒரு நல்ல மடிக் கணினி அல்லது கணிப்பொறி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை வாங்கிக் கொள்ளும்படி தெரிவிக்கின்றனர். இதனால் அவர்கள் எந்த பிரச்சனையும் இன்றி வீட்டிலிருந்து வேலைப் பார்க்கலாம்.

வீட்டிலிருந்து நீங்கள் பணியாற்றும் போது எந்த இடையூறும் இல்லாமல் பணியாற்ற ரூபாய் 40,000/- க்கு கீழ் உள்ள 5 மடிக் கணினிகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

ஸ்ட்ராபெர்ரி சந்திர கிரகணம் : இந்தியாவில் நேரடியாக பார்ப்பது எப்படி?

Lenovo IdeaPad 330 (Rs 22,990)

அனைத்து அடிப்படை பணிகளையும் எளிதாக செய்ய மிகவும் ஏற்றது Lenovo IdeaPad 330. ஆனால் game விளையாடவோ அல்லது heavy multitasking பணிகளை செய்யவோ இந்த மாடல் ஏற்றதல்ல. Document களை தட்டச்சு செய்ய, excel sheet களை நிரப்ப, இணையத்தில் browse செய்வது போன்ற அடிப்படை பணிகளுக்கு இது ஏற்றது. Intel Pentium Quad Core processor paired with 4GB RAM, 1TB SATA Hard Disk, 15.6-inch திரை (display) மற்றும் genuine Windows 10 Home பதிப்புடன் இந்த மாடல் மடிக்கணினி வருகிறது.


Dell Inspiron 14 3481 (Rs 26,990)

உறுதியான கட்டமைப்புக்கு எப்போதும் பெயர்போனது Dell மடிக்கணினிகள். நீங்கள் சற்று முரட்டுதனமான பயனராக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் உங்களுக்காகவே வடிவமைக்கப்பட்டது Dell மடிக்கணினிகள். Dell Inspiron 14 3481 மடிக்கணினியின் எடை 1.79 கிலோகிராம். இதன் அர்த்தம் என்னவென்றால் உங்கள் அலுவலகம் திறந்த பிறகு இதை எளிதாக அலுவலகத்துக்கு கூட எடுத்துச் செல்லலாம். Intel Core i3 7th generation processor உடன் வரும் இந்த மாடல் மடிக்கணினியில் Document களை நிரப்புவது, மின்னஞ்சல்களுக்கு பதில் அனுப்புவது, light multitasking ஐ கையாள்வது போன்ற பெரும்பாலான பணிகளை செய்ய முடியும். 4GB RAM மற்றும் 1TB hard disk உடன் வரும் இந்த மடிக்கணினியில் ஏற்கனவே நிறுவப்பட்ட Ubuntu operating system உள்ளது.


Lenovo Ideapad S145-15IIL (Rs 34,990)

4GB RAM க்கு பதில் 8GB RAM உடன் இந்த மடிக்கணினி வந்திருந்தால் இந்த பட்டியலில் இது தான் முதல் போட்டியாளராக இருந்திருக்கும். 10th generation Intel Core processor, 4GB RAM paired with a 1TB SATA HDD மற்றும் 15.6-inch display உடன் வரும் இந்த மடிக்கணினியின் எடை வெறும் 1.85 கிலோகிராம் மட்டும்தான். ஏற்கனவே நிறுவப்பட்ட genuine Windows 10 Home operating system மற்றும் Microsoft Office ஆகியவற்றுடன் இந்த மாடல் கிடைக்கிறது.


உலகை நோக்கி வரும் 3 பெரிய விண்கற்கள்; 2020 இன்னும் எத்தனை சோதனைகளை தரப் போகிறதோ?

HP 15s-eq0007AU (Rs 30,990)

Intel processor க்கு பதிலாக AMD Ryzen chipset processor உடன் கூடிய ஒரு மடிக்கணினியை தேர்வு செய்ய நீங்கள் விரும்பினால் அதற்கு HP 15s-eq0007AU மாடல் தான் சரியான தீர்வு. Ryzen 3 processor paired with 4GB RAM மற்றும் 256GB NVMe SSD உடன் இந்த மாடல் கிடைக்கிறது. அடிப்படை multitasking பணிகளை கையாளும் திறன் கொண்ட இந்த மாடல் மடிக்கணினியில் 15.6-inch display உள்ளது மேலும் இதன் எடை 1.77 கிலோகிராம் மட்டும்தான். ஏற்கனவே நிறுவப்பட்ட Windows 10 Home operating system மற்றும் Microsoft Office Suite ஆகியவற்றுடன் இந்த மாடல் வருகிறது.


Asus VivoBook 15 X543UA-DM582T (Rs 39,990)

நிறைய multitasking பணிகள் மற்றும் CS: GO games விளையாடுவது போன்ற சில heavy task களையும் செய்ய ஒரு மடிக்கணினி வேண்டும் என நீங்கள் தேடினால் அதற்கு Asus VivoBook 15 X543UA-DM582T மாடல் சிறந்த தேர்வு. 15.6-inch display, 8th generation Intel Core i5 processor, 8GB RAM மற்றும் 1TB of SATA hard drive ஆகியவற்றுடன் இது கிடைக்கிறது.


ஏற்கனவே நிறுவப்பட்ட Windows 10 Home பதிப்புடன் இது வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Five laptops that cost less than rs 40000

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X