Five Travel Apps : பயணங்கள் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான அட்வென்ச்சர் சீக்கர்களாக இருப்பார்கள். காரை எடுத்துக் கொண்டு ரோட் ட்ரிப்பாக இருந்தாலும் சரி, ஹிட்ச் ஹைக்கிங்காக இருந்தாலும் சரி, இந்த ஐந்து செயலிகளை டவுன்லோடு செய்துகொள்ளுங்கள். உங்களுக்கு இது நிச்சயமாய் உதவும்.
Five Travel Apps : கூகுள் ட்ரிப்ஸ்
உங்களுக்கு அருகில் இருக்கும் உணவகங்கள், அனைவரும் விரும்பி ரசிக்கும் சுற்றுலாத் தளங்கள், போக்குவரத்து வசதிகள் என அனைத்து தகவல்களும் அதில் இடம் பெற்றிருக்கும். இதனால் தகவல்கள் தேடி முன்பின் அறிமுகமற்றவர்களிடம் கேள்வி கேட்கும் நிலையை தவிர்க்கலாம்.
போலார் ஸ்டெப்ஸ்
முன்பின் அறிமுகம் இல்லாத ஒரு ஊருக்கு செல்கின்றீர்கள். அங்கிருந்து உங்களின் விடுதிக்கோ அல்லது இதற்கு முன்பு பார்வையிட்டுக் கொண்டிருந்த இடத்திற்கோ நீங்கள் செல்ல விரும்பி, அந்த இடம் குறித்த தகவல்கள் அல்லது வழி மறந்துவிட்டால் உங்களுக்கு இந்த ஆப் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ட்ரிவ்வோ
உங்களுக்கு விருப்பமான இடத்திற்கு நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்களா நீங்கள். உங்களின் எரிபொருள் செலவு சிக்கனம், பெட்ரோல் நிலையங்கள், பயணித்த தொலைவு ஆகியவற்றை கணக்கிட இந்த ஆப் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கும். இது பெட்ரோல் மற்றும் டீசல் பொருட்களுக்கு நீங்கள் செலவு செய்யும் பணத்தை கால்குலேட் செய்ய உதவியாக இருக்கும்.
க்ளூக்
க்ளூக் என்பது டிக்கெட் புக்கிங் ஆப் ஆகும். உங்களின் ட்ராவல் பிளானிங், மற்றும் ட்ராவல் கெய்ட் என அனைத்தும் ஒரே ஆப்பில் இருக்கும். இதனால் உங்களின் ப்ளான்களை எளிமையாக்க இது பெரிதும் உதவிகரமாக இருக்கும்.
பேக்பாய்ண்ட்
நீங்கள் பயணிக்க இருக்கும் இடத்தை பற்றிய முழுமையான தகவல்களை அறிந்து கொள்ள மிகவும் உதவிகரமாக இருக்கும் இந்த ஆப். அந்த பயணத்திற்கு தேவையான அனைத்து உபகரணங்கள், தகவல்கள், அப்பகுதியில் இருக்கும் காலநிலை குறித்து அனைத்து அப்டேட்டுகளையும் உங்களுக்கு அளிக்கும் இந்த செயலி.
மேலும் படிக்க : இத்தனை நாடுகளுக்கு விசா ஆன் அரைவல் மூலம் இந்தியர்கள் பயணிக்கலாம்